Saturday, October 31, 2020

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

பீர்க்கங்காய்,வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்ப கடினமாக இருக்கும்.

நீரிழிவு,தோல் நோய்,கண் நோய், நாட்பட்ட புண்,இரத்த சோகை முதலியவற்றை குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய்_முற்றிவிட்டால்_கவலை வேண்டாம்.முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவு பொருளாகவும் திகழ்கிறது. 

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான்.ஆனால் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு சத்து, நார்ச்சத்து,மாவுப்பொருள், வைட்டமின் ஏ,வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு_நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை,விதைகள்,வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி,சிரங்கு,நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாக பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம்.மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும்.சொறி,சிரங்கு உள்ள இடங்களில் இலை சாற்றை தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டு காய்ச்சி வேண்டும்.ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும்.இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு,நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

வயிற்றுப்புண் குணமாகும் இதை செய்தால்



அல்சர் குணமாக இயற்கை வீட்டு வைத்திய மருத்துவ குறிப்புகள்:

◆மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.

◆மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது.
எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும்.

◆அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் காணாமல் போகும்.

◆பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றும்.

◆தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் சரியாகும்.

◆பாகற்காயை விட பாகற்பழம் மிகவும் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறுகிறது. 

◆மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கிறது.

◆வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

◆தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆற்றி விடும்.

◆அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கிவிடும்.

◆புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.

◆அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர்சீக்கிரம் நீங்கிவிடும். 

◆அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.
துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.

◆வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

◆அத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி 100மிலி அளவுகுடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.

◆அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரலாம்.

◆சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சைஅளவு எடுத்து பாலில் கலந்து பருகி வரலாம்.

Thursday, October 29, 2020

நீ நீயாக இரு

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

 *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!*

 காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! ....

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! ....

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்* , இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....

உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று *பூமி* ! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்! மற்றொன்று *மரம்* ! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்! 

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று *முடி* ! மற்றொன்று *நகம்* ! இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்! உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்* மற்றவன் அவனுக்கு *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் *சரஸ்வதி* தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், தேவி தாசரைப்பார்த்து காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! நீ மனிதனாகவே இரு என்று தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்! 

இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும்! பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை யென வாழ்க்கையை இயந்திரமயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது! 

*நீ நீயாகவே மனிதனாகவே இரு , வாழ்க வளமுடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......*

Wednesday, October 28, 2020

முக்கிய அரசாணைகள்

*important modified govt G.o. s*
தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm] ‪+91 94426 43238‬: அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

இந்த தகவலை முடிந்த வரை பிறருக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி

Tuesday, October 27, 2020

கடவுள் எங்கே?

முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து, பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:
.
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..
.
'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..
.
குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..
.
மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..
.
ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...
.
மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...
.
அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..
.
இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...
.
அடேயப்பா....எத்தனை வழிகள்...
.
ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..
.
கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..
.
'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..
.
'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...
.
'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..
.
'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....
.
'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...
.
'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...
.
'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...
.
என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...
.
குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..
.
கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..
.
'மவராசனா இரு...'
.
வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..
.
நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!
.
'இங்கென்ன செய்கிறீர்..!!'
.
* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*
.
'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..
.
* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*
.
'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'
.
* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*
.
'அப்படியென்றால்..??'
.
* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....
.
பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..
.
தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...
.
நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *
.
'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..
.
* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *
.
'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'
.
* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...
.
உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...
.
பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே எனைக் காண்பாய்.
.
🙂🙂🙂🙂புன்னகைத்தார் கடவுள்!🙏🙏🙏🙏

Monday, October 26, 2020

லீ குன் ஹீ

 
இன்றைய நாளில் ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷிங் இப்படி ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் என்றாலே, நமக்கெல்லாம் நினைவில் வருவது சாம்சங் தான்.

இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வு சாம்சங் தான்.


 
அப்படி உலகம் முழுவதும் விருப்பமான தேர்வாக இருக்கும் சாம்சங் ராஜ்ஜியத்தின் தலைவர் தான் லீ குன் ஹீ.

பெரும் இழப்பு 
78 வயதான லீ குன் ஹீயை ஒரு காலகட்டத்தில் வர்த்தக ரீதியாக விஞ்ச ஆளே இல்லை எனலாம். ஒட்டுமொத்த உலகையும் தனது வணிக திறமையால் தன்பக்கம் ஈர்த்தவர். உண்மையில் தென் கொரியாவிற்கு இது மிகப்பெரிய இழப்பு தான். ஏன் ஒட்டுமொத்த உலகிற்கும் லீ குன் ஹீ இறப்பு பெரும் இழப்பு தான்.

எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தின் தந்தை 

இன்றைய நாளிலும் சாம்சங் என்றாலே தனித்துவமான தரமும், விலையும் மக்களை ஈர்த்துள்ளது. அது இந்தியா, அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளில் முன்னணி பிராண்டாக வலம் வந்து கொண்டுள்ளது எனலாம். சீனாவுக்கு சரியான போட்டியாளராகவும் இருந்து வருகிறது. இப்படி சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தின் தந்தையாக இருந்தவர் தான் லீ குன் ஹீ.

லீ குன் ஹீ 

தென் கொரியாவின் சிறந்த பிசினஸ் மேனாக திகழ்ந்த Lee Kun-hee, ஜனவரி 9,1942ல் தென் கொரியாவில் பிறந்தவர். 1987 முதல் 2008, 2010 - 2020 வரையில் சாம்சங்கின் தலைவராக இருந்தவர். அது மட்டும் அல்ல சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் 40.8 பில்லியன் டாலர்களாகும்.

கல்வி
1953ல் தனது மேல் படிப்புக்காக ஜப்பான் சென்றுள்ளார். இந்த நிலையில் 1965ல் வணிகம் சம்பந்தமான பட்டதாரி படிப்பினை வசேடா பல்கலைக் கழகத்திலும் (Waseda University) பயின்றுள்ளார். 1966ல் தனது எம்பிஏ படிப்பினை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார். படிப்பை முடித்த கையோடு தான், லீ குன் முதன் முதலாக சாம்சங் குழுமத்தில் 1968ல் இணைதுள்ளார்.

சாம்சங்கில் முதல் அடி 

1968ல் சாம்சங்கில் இணைந்திருந்தாலும், அவரின் தந்தை இறந்த பிறகு தான் 1987ல் தலைவராக பதவியேற்றுள்ளார். 1978ல் சாம்சங் சிடி கார்ப்பரேஷன் துணைத் தலைவராகவும், 1979ல் சாம்சங் குழுமத்தின் துணைத் தலைவராகவும் முன்னேறியுள்ளார். இதற்கிடையில் தான் 1993ம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் தனக்கென புதிய அடையாளத்தினை உருவாக்கியது.

வாழ்நாள் முழுவதும் சாம்சங் தான்
இந்த நிலையில் தான் 1998ல் சாம்சங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இருந்தார். இப்படி படிப்படியாக தனது ஆரம்ப காலம் முதல் கொண்டே தனது வாழ்நாள் முழுக்க சாம்சங்கிற்காக செலவிட்டவர் தான் லீ குன்.
1993-களில் சாம்சங் குழுமம் அதிக தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தியது.


சக்தி வாய்ந்த மனிதர்
இபப்டி தரத்திலும் விற்பனையையிலும் பட்டையை கிளப்பிய லீ குன், ஏப்ரல் 2008ல், சாம்சங்கில் நடந்த நிதி ஊழல் பிரச்சனை காரணமாக தனது பதிவியினை ராஜினாமா செய்தார். பின்னர் மார்ச் 24, 2010ல் மீண்டும் சாமசங்கிற்கே திரும்பினார். உலகின் மிக சக்தி வாய்ந்த நபர்களின் போர்ப்ஸ் பட்டியலில் 35வது மிக சக்தி வாய்ந்த நபராக லீ குன் இணைக்கப்பட்டார். இதனாலேயே மிகவும் சக்தி வாய்ந்த கொரிய மனிதனாராகவும் இருந்து வந்தார்.

பொருளாதாரம் 
1990-களில் சாம்சங் நிறுவனம் மெமரி சிப் உருவாக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களைத் தாண்டி வளர்ந்தது. இதற்கிடையில் 2000-ம் ஆண்டுகளில் தன் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாகியது. இன்று தென்கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் எலக்ரானிக்ஸ் முக்கிய நிறுவனமாக உள்ளது.
அதுமட்டும் அல்ல இன்றளவில், சர்வதேச நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக பணம் செலவிடும் நிறுவனமாக சாம்சங் உள்ளது.

மறைவு
இந்த நிலையில் தான், இன்று காலையில் லீ குன் உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவருடைய இறப்புக்கான காரணம் என்னவென்ற முழு விவரங்கள் தெரியவில்லை. இவருக்கு ஏற்கனவே 1990-களில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பிருந்து மீண்டிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நெஞ்சுவலியில் காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.


ஆன்மீக கதைகள்

படிக்கவேண்டிய கதை!
புறம் பேசாதீர்
காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. 

அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். 

கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். 

முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். 

இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். 

அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். 

மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். 

மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். 

முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. 

நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். 

தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.

தான தர்மங்கள் செய்து, 

தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். 

அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். 

தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். 

இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். 

‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். 

தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். 

இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். 

அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.

‘அரசன் அமைத்திருக்கும்குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே,அவன் வீட்டு முன்பா?’ என்றான். 

அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். 

‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும்உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். 

அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். 

கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். 

மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். 

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. 

அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். 

அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, 

நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், 

தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

படித்ததில் கவர்ந்தது

Sunday, October 25, 2020

கடற்கரைகள்

உலகத்தில் உள்ள நீளமான கடற்கரைகள்

#Long #Breach 

உலகின் மிகப்பெரிய கடற்கரையைக் கொண்ட நாடு ப்ரேசில். இங்கு தான் உலகின் நீளமான கடற்கரை ப்ரையா டூ கேஸினோ (Praia do Cassino) அமைந்துள்ளது. இதனின் நீளம் 158 Miles.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடற்கரை எய்ட்டி மைல் பீச் (Eighty Mile Beach)140 Miles.,

உலகின் மூன்று பெரிய கடற்கரைகளை கொண்ட பெருமை ஆஸ்திரேலியாவையே சேரும்.

நம்ம ஊரில் உள்ள மெரினாவின் மொத்த நீளம் 8 மைல் தொலைவு தான் மெரினா உலகின் இரண்டாவது பெரிய அர்பன் பீச் (urban beach). அதாவது நகர்புறத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பீச்.

இந்த வகை பீச்களில் வாட்டர் பார்க், ரிசார்ட், ஸ்விமிங் பூல், இலவச நுழைவு, குடைக்கு கீழ் அமர்தல், டேட்டிங், பொழுதுபோக்குதல் மற்றும் நகரத்தை ஒட்டியே உள்ள கடற்கரை.

இது போன்ற சிறப்பு அம்சங்கள் அமைந்த கடற்கரையைத்தான் அர்பன் பீச் என்று அழைப்பார்கள். அந்த வகையில் தான் மெரினா இரண்டாவது இடம் வகிக்கிறது.

பெரும்பாலனோர் உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

பாம்புகள் அறிந்ததும் அறியாததும்

பாம்பு –அறிந்தும் அறியாததும்

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபாயம் அளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு

2.கட்டு வீரியன்

3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டை பாம்பு

5.கரு நாகம்

6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து "சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்து விடக்கூடும்.

நல்லபாம்பு கடித்து விட்டால் சித்த மருத்துவ முறையில் செய்யப்படும் மருத்துவம் :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், அந்நிலையில் வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் இல்லையேல் வாய் திறக்க, வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும். இந்நிலையில் ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் இதன் மூலம் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழ் பதிய தேவையான ஆவணங்கள்

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...