Thursday, April 29, 2021

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டு உள்ளது.தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.இரவுநேர முழுஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல்  ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடாது.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி

முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி

உணவகங்களில் காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி

காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை, உணவு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

Monday, April 19, 2021

அரசு விரைவு பேருந்துகளின் பயண நேரத்தில் மாற்றம்

தமிழகத்தில் இரவு ஊரடங்கு உள்ளதால் அரசு விரைவு பேருந்துகளின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு செய்திகளை பெற

Tuesday, April 13, 2021

மினிமம் பேலன்ஸ் மூலம் 300 கோடி வசூலித்த SBI

மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கி 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த விவரம் வெளிவந்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

நாட்டின் 24வது தலைமை தேர்தல் அதிகாரியாக சுனில் சந்திரா பொறுப்பு ஏற்றார்

24வது தலைமை தேர்தல் அதிகாரியாக சுனில் சந்திரா 13 /4 /2021 அன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார் ‌.

இவர் 39 ஆண்டுகள் வருமான வரி துறையில் பணியாற்றியவர். 2019 ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
2022 மே மாதம் 14 தேதி வரை இப்பதவியில் இருப்பார்.

இவர் தலைமையில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தராகாண்ட், மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Sunday, April 11, 2021

உலர் திராட்சையின் நன்மைகள்

உலர் திராட்சை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்து, இரத்த சோகைப் பிரச்சினையினை சரி செய்கின்றது. மேலும் உலர் திராட்சையினை நீரில் ஊறவைத்து தினமும் 5 முதல் 6 சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையானது சரியாகும்.

மேலும் உலர் திராட்சை செரிமானப் பிரச்சினைகளான மலச் சிக்கல், பசியின்மை, மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் ஈறுகளில் இரத்தம் கசிதல், எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து இருத்தல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.


காசநோயின் போது உடல் எடை குறைவது வழக்கமான ஒன்று, அந்த நேரத்தில் இரத்த விருத்தியினை அதிகரித்து உடலினை வலுவாக்கும்.

அதேபோல் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களும் உலர்திராட்சையை பசும்பாலில் ஊறவைத்து அரைத்துக் குடித்தால்,  மஞ்சல் காமாலை  நோயில் இருந்து மீளலாம் என்று கூறப்படுகின்றது.

தலைமுடி உதிர்வுப் பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையினை தொடர்ந்து எடுத்துவரும்போது மிகச் சிறந்த தீர்வினைப் பெறலாம்.

Sunday, April 4, 2021

மும்பையில் IPL போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்

மைதான ஊழியர்கள் பாதிப்பு

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 10 லீக் ஆட்டங்கள் வருகிற 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இங்கு 10-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.ஐ.பி.எல். போட்டிக்காக மும்பை வான்கடே மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே வீரர்கள் நிதிஷ் ராணா, அக்‌ஷர் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது போட்டி நடக்க இருக்கும் வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழுவில் இடம் பெற்று பல்வேறு பணிகளை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 7 உறுப்பினர்களும் கொரோனாவில் சிக்கி உள்ளனர். ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கல்இன்னொரு பக்கம், மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதனால் மும்பையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். ஆட்டங்கள் அரங்கேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை மும்பையில் போட்டியை நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மும்பைக்கு பதிலாக ஐதராபாத், இந்தூர் மைதானங்கள் மாற்று இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.நடத்த முடியும்இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘ஐ.பி.எல். போட்டி தொடங்க மிகவும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மும்பையில் நடைபெற வேண்டிய ஆட்டங்களை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது எளிதான காரியம் கிடையாது. மும்பையில் ஊரடங்கு உத்தரவு ஒருவேளை பிறப்பிக்கப்பட்டால் கூட அணியினர் ஏற்கனவே கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதாலும், ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பதாலும் போட்டியை மும்பையில் திட்டமிட்டபடி நடத்த முடியும் என்று நம்புகிறோம்’ என்றார். இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களையும் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களை மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற FOLLOW BUTTON ஐ கிளிக் செய்யவும்

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Thursday, April 1, 2021

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்

ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
மேலும் ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது டுவிட்டரில், “ இந்தியாவின் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த விகிதங்களில் தொடர்ந்து இருக்கும், அதாவது மார்ச் 2021 வரை நிலவும் விகிதங்கள்.
 மேற்பார்வை மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப் பெறப்படும்” என்று பதிவிட்டுள்ளார். 

இதன்படி பி.பி.எப், வருங்கால வைப்பு-ஓராண்டுகால வைப்புநிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டவட்டி விகிதம் குறைப்பு வாபஸ் பெறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வட்டியை நேற்று நிதியமைச்சகம் குறைத்த நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற FOLLOW BUTTON ஐ கிளிக் செய்யவும்
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...