Wednesday, March 31, 2021

டிராகன் பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
 
உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL  கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
 
இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், அவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன.
 
டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள் மலம் எளிதில் வெளியேற உதவி, உணவு செரிமான உறுப்புகள் வழியாக சிக்கலின்றி செரிமானமாக உதவுகிறது.
 
டிராகன் பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து  அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.
 
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்; இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
 
டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள்  இப்பழத்தை உண்ணலாம்.

இதை போன்ற பல்வேறு செய்திகளை பெற உடனே Follow Button ஐ Click  செய்யவும்

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

ஹாங்காங் மீதான பிடியை இறுக்கிய சீனா

சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

ஹாங்காங்கில் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹாங்காங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.
இந்த முறையை முற்றிலும் மாற்றி சட்டமன்றத்தில் சீன ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்த தேர்தல் முறை மாற்றியமைக்கும் பணிகளில் சீனா இறங்கியது.

அதன்படி கடந்த மாத தொடக்கத்தில் சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை முற்றிலுமாக சிதைக்கும் நடவடிக்கை என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் ஹாங்காங் தேர்தல் முறையை மாற்றியமைக்க ஹாங்காங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக சீன நாடாளுமன்ற நிலைக்குழு ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஹாங்காங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தேர்தல் முறை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்படுகிறது; மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக, அதாவது 35-ல் இருந்து 20 ஆக குறைக்கப்படுகிறது; தேர்தலுக்கு முன் வேட்பாளர்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்படும், என்பன போன்ற பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்கு போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் பல்வேறு செய்திகளை பெற FELLOW Button ஐ கிளிக் செய்யவும்

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Tuesday, March 30, 2021

வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்கள் எந்த மாநிலத்தில் அதிகம் என்று தெரியுமா?

இந்தியாவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில் 10-ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி தமிழகத்தில் இருந்து கடந்த ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கும் இடையிலான  5 ஆண்டுகள் காலகட்டத்தில் 13.1 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நாட்டிலெயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற மாநிலத்தவர்களாக கேரளவாசிகள் முதல் இடத்தையும், தமிழர்கள் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும், இதில் கேரளத்தவர் 19 லட்சம் பேர் என்றும், தமிழர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த இரு மாநிலங்களின் பங்களிப்பு மட்டுமே 24 சதவீதமாக  ஆக உள்ளது. 3வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்கிருந்து 12.6 லட்சம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குசென்றுள்ளனர். இதே போல 44.3 லட்சம் பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா காலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4.7 லட்சம் பேர் தமிழகத்திற்கு திரும்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Monday, March 29, 2021

செரிமானத்திற்கு உதவும் அற்புத மருந்து சீரகம்

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.
 பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம்  பயன்படுத்தப்படுகிறது. 

சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஜீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
 
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள்  வைப்பதற்கும் உதவும்.

 
சீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
 
ஜீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக  பயன்படுத்தலாம்.
 
சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Sunday, March 28, 2021

வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்பட உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்களின் விவரம்

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Saturday, March 27, 2021

தபால் வாக்கை செலுத்தும் வழிமுறை

*தபால் வாக்கு பதிவு செய்யும் முறை வழிமுறை*
💐💐💐💐💐💐💐💐💐
தங்களுக்கு வழங்கப்பட்ட தபால்
ஓட்டைப் பிரித்தால்
 *கவர்-A,*

*கவர்-B,* 

 *உறுதிமொழிப் படிவம்(படிவம்-17)*
 ஆகிய மூன்று இருக்கும்.

1.உறுதி மொழிப்‌படிவத்தை (படிவம்-17) பூர்த்தி செய்து *கையொப்பம் இட்டு,* வாக்கு பதிவிடும் மையத்தில் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் சான்றொப்பம் ( Attestation) பெறவேண்டும்.

2. *கவர் Aன் வெளியே* வாக்குச்சீட்டு வரிசை எண் எழுத வேண்டும்.(எழுதப்பட்டு இருக்கலாம்)

*3.கவர்-Aல் உள்ள வாக்குச் சீட்டை எடுத்து* வாக்குச்சீட்டில் உரிய சின்னத்தில் *பால்பைன் பேனிவில் டிக்✔️ செய்யவேண்டும்.*

*4.வாக்குச் சீட்டை மட்டும்* கவர் Aல் வைத்து ஒட்ட வேண்டும்.
*5. கவர் Bயில்,* உறுதிமொழி படிவம் (படிவம்17), கவர் A ஆகிய இரண்டையும் வைத்து ஒட்டி *கவருக்கு வெளியே உங்கள் கையொப்பம் இடவேண்டும்*

6. தங்கள் சட்டமன்றத்திற்கு என வைக்கப்பட்ட பெட்டியில் ஒட்டி‌ வைத்த *கவர் Bயை போட வேண்டும்.*

அல்லது அஞ்சல் துறையின் அஞ்சல் பெட்டியில் செலுத்துவதன் மூலமாகவும் இலவசமாக அனுப்பலாம் 

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை அவர் தனது Twitter பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் அவராகவே முன் வந்து பரிசோதனை செய்தார். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 மருத்துவர்களின் அறிவுரை படி அவராகவே வீட்டில் தனிமை படுத்திக்கொண்டதாக தெரிவித்தார். 
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

மீண்டும் மிரட்ட வருகிறது ‌இரபேல் விமானங்கள்

மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன

மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது.

இதன்படி, 2020 ஜூலை முதல் 2021 ஜனவரி வரை 11 ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை, பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்திலும், ஏப்ரல் மத்தியில் மேலும் ஒன்பது ரபேல் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.

Thursday, March 25, 2021

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் சிக்கலில் உலக நாடுகள்

சூயஸ் கால்வாய்

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய்  ஆசியாவின் மத்திய தரைக்கடலையும் ஐரோப்பாவின் செங்கடலையும் இணைக்கும் உலகின் மிக முக்கியமான நீர் வழிப்பாதை ஆகும்.

1869 ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிமீ நீளமுள்ள இந்த கால்வாய் வழியாக 12% உலக வர்த்தகமும் 8% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகமும் நடைபெறுகிறது. 
ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த கால்வாய் வழியாக கொண்டு செல்ல படுகிறது. 2015 ம் ஆண்டு முதல் பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.


இந்த நிலையில் 24/03/2021 அன்று 400மீட்டர் நீளமும் 59மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிக பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான EVERGIVEN பலத்த காற்றினால் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இக்கப்பலை
இழுவை கப்பல் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு வேலை இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றால் உலக வர்த்தகம் ஸ்தம்பித்து விடும் அபாயமும் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கப்பலை மீட்க கால்வாயின் இரு பக்கங்களிலும் மண் தோண்டும் பணியும் துவங்கியது.


இப்பணி இரு நாட்களில் முடிவு பெறவில்லை என்றால் பழைய கால்வாயை திறக்க போவதாகவும் எகிப்து அறிவித்துள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

எளிய முறையில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயற்கை மூலிகை பானங்கள்


➖➖➖➖➖➖➖➖
💠♻️💠♻️💠♻️💠♻️
🍹🧉 இயற்கை முறையில் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்திகரிக்கவும், விருத்தியாக்கவும் கீழே சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

👉இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து, அத்துடன் ஒரு நாட்டு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

🍒🍯 தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை ஒரு வேளைக்கு 2 அல்லது 3 வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்திற்கு இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் உண்டு, எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வர‌ உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

👉இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தப் படுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.

🍹🧉 செம்பருத்திப் பூவிலும் இரத்தம் விருத்தியாக்கும் சக்தி உண்டு. பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு தீர்ந்து இரத்ததை விருத்தியாகும்.

👉தூங்கும் முன்பு இரவு அரை தம்ளர் நீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் விருத்தியாகும். பீட்ரூட் சாறு அருந்தி வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

🍈🍈 இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் இரத்தம் சுத்தமாகும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Wednesday, March 24, 2021

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

வங்கிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை

மார்ச் 27 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை
மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29 - ஹோலி பண்டிகை விடுமுறைமார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை
மார்ச் 31 - நிதி ஆண்டு முடிவு விடுமுறை
ஏப்ரல் 1 - வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை
ஏப்ரல் 2 - புனித வெள்ளி விடுமுறை

ஏப்ரல் 4 - ஞாயிற்றுக் கிழமை
ஏப்ரல் 6 - தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை

வங்கி சேவை தேவை உள்ளவர்கள் விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு முன்னதாகவே பணிகளை முடித்து கொள்வது நல்லது 

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Tuesday, March 23, 2021

அமிலங்கள் பற்றிய தகவல்கள்

அமிலங்கள் பற்றிய தகவல்கள்:-

1. சிட்ரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- எலுமிச்சை
2. லாக்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- பால்
3. பார்மிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- எறும்பு கொடுக்கு
4. பியூட்டைரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- வெண்ணெய்
5. டாட்டாரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- திராட்சை
6. அசிட்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- வினிகர்
7. மாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- ஆப்பிள்
8. யூரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- சிறுநீர்
9. ஆக்ஸாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- தக்காளி
10. ஸ்டீயரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- கொழுப்பு
11. டானிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- தேநீர்
12. ஹைட்ரோகுளோரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- இறைப்பை
13. அஸ்கார்பிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- சோடா பாணம்
14. அனலின் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- வெங்காயம்
15. பால்மிடிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- பாம் ஆயில்
16. கார்பானுக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- பூண்டு
17. அல்ஜினிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- கடல் பாசி
18. கோலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- பித்தநீர்
19. கர்ப்பிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
- வெற்றிலைை

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா ஆகிய 6 நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி.
இலங்கையில் 2008 ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டன் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய 22 நாடுகள் ஆதரித்தும் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் , கியூபா ஆகிய  11 நாடுகள் எதிர்த்தும் வாக்கு அளித்தன.

ஆனால் இந்தியா ,  நேபாளம் , ஜப்பான் , இந்தோனேசியா ஆகிய 14 நாடுகள்  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பங்கு கொள்ளாமல் புறக்கணித்தது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

உலக அளவில் இராணுவ வலிமையில் இந்தியா 4ம் இடம்

உலக அளவில் ராணுவ வலிமையில் இந்தியாவுக்கு 4-வது இடம் முதலிடத்தில் சீனா
உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், ‘மிலிட்டரி ரைடக்ட்’ என்ற ராணுவ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, சுறுசுறுப்பான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ராணுவ வலிமை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டது.

2-வது இடத்தில் அமெரிக்கா

அந்த ராணுவ வலிமை குறியீட்டின்படி, 100 புள்ளிகளுக்கு 82 புள்ளிகள் எடுத்து சீனா முதலிடத்தில் உள்ளது.

74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷியா 3-ம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா 4-ம் இடத்திலும், 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ம் இடத்திலும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ம் இடத்திலும் உள்ளன.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவ வலிமையில் அந்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராணுவ பட்ஜெட்

அமெரிக்கா, ராணுவத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிடுகிறது. சீனா, 26 ஆயிரத்து 100 கோடி டாலரும், இந்தியா 7 ஆயிரத்து 100 கோடி டாலரும் செலவிடுகின்றன.

போர் வருவதாக யூகித்துக்கொண்டால், 14141 விமானங்கள் கொண்ட அமெரிக்கா வான்வழி போரில் வெற்றி பெறும். 406 கப்பல்கள் கொண்ட சீனா, கடல்வழி போரில் வெற்றி பெறும். 54866 ராணுவ வாகனங்கள் கொண்ட ரஷியா, தரைவழி போரில் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Monday, March 22, 2021

கோவிட் ஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் கால இடைவெளியை 8 வாரமாக அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

 இந்தியாவில் ஜனவரி 16 நாள் முதல் கோவிட் ஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இரண்டு தடுப்பூசிகளும் 4 வார இடைவெளியில் 2 கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகிறன.
இந்நிலையில் நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு கோவிட் ஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸின் கால அளவை 4 வாரங்களுக்கு பதிலாக  6 முதல் 8 வார இடைவெளியில் செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே வேலையில் கோவாக்ஸின் தடுப்பூசி கால இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 4 வார இடைவெளியில் செலுத்த அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Sunday, March 21, 2021

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் அணி

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் , தீபக் குமார், பங்கஜ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 14 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது.
16 புள்ளிகள் பெற்ற அமெரிக்க அணி தங்க பதக்கம் பெற்றது
முன்னதாக இந்திய மகளீர் அணி 4 வது இடம் பெற்றது

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

EVM பதில் Remote Voting முறைக்கு மாற உள்ள இந்தியா?

அடுத்த தேர்தலில் EVM பதில் ரிமோட் ஓட்டிங் அறிமுகம்?
'அடுத்த லோக்சபா தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 'ரிமோட் ஓட்டிங்' எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின் போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும்.அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

டோல்கேட் இல்லாத நாடாக மாற உள்ள இந்தியா


இந்தியாவில் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் பின்பற்ற படும் Fastag முறை நீக்கப்பட்டு GPS மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்த பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Saturday, March 20, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

9,10,11 ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Friday, March 19, 2021

பஞ்சாபில் பள்ளி கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடல்

கொரோனா பரவலின் வேகம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பஞ்சாபில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டார்

ஹீமா தாஸை வென்ற தமிழக வீராங்கனை

தடகளம்: தனலட்சுமி சாதனை

பஞ்சாப்பில் பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் ஹிமா தாசை (24.39) முந்தி 'நம்பர்-1' இடம் பிடித்த தமிழகத்தின் தனலட்சுமி (23.26 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். தவிர 1998ல் சென்னையில் நடந்த தேசிய தடகளத்தில் பி.டி.உஷா (23.30) படைத்த சாதனையை தகர்த்தார்.

பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கிராசெனா மெர்லி, 1.84 மீ., தாண்டி முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் மற்றொரு வீராங்கனை கிஜி ஜார்ஜ் 1.70 மீ., தாண்டி, வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் ஐஸ்வர்யா (13.05 மீ), வெண்கலம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் இலக்கியதாசன் (21.25 வினாடி) இரண்டாவது இடம் பெற்று வெள்ளி வென்றார்.

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய தடகள வீரர்

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்தை சேர்ந்த தேசிய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர் (21). இவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதித் தேர்வு கடந்த மார்ச் 16-ம் தேதி பஞ்சாபில் உள்ள பட்டியாலா தேசிய பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இலக்கை தாண்டி சாதனை

நீளம் தாண்டுதலில் சீனியர் பிரிவில் பங்குபெற்ற முரளி ஸ்ரீசங்கர் நிர்ணயிக்கப்பட்ட 8.22 மீட்டர் நீளத்தைத் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி 8.26 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் பதக்கம் வென்று சாதனைப்படைத்தார். இதன்மூலம் முரளி ஸ்ரீசங்கர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

முரளி ஸ்ரீசங்கர் கடந்த 2018-ல் தேசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் 8.20 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தவர். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக நடைபெற்ற தகுதி போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 16, 2021

உலகில் மிகவும் மாசுபட்ட நகரம் எது என்று தெரியுமா?

'உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்தியாவில்!' - புதிய ஆய்வறிக்கையில் தகவல்

உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் உள்ளன என்றும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி திகழ்கிறது என்றும் ஒரு புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. சுவிஸ் அமைப்பான ஐ.க்யூ ஏர் (IQAir) இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. 'உலக காற்றின் தர அறிக்கை, 2020' என்கிற தலைப்பில் உலகளவில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், 2019 முதல் 2020 வரை டெல்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவிகிதம் மேம்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னேற்றம் இருந்தபோதிலும், மாசுபாட்டில் 10-வது இடத்தில் டெல்லி உள்ளது. உலகின் மாசுபட்ட தலைநகராகவும் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, "மிகவும் மாசுபட்ட நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் உள்ளன" என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

டெல்லியைத் தவிர, உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 21 இந்திய நகரங்களான காசியாபாத், புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர், ராஜஸ்தானில் பிவாரி, ஃபரிதாபாத், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்தக் மற்றும் தருஹேரா, பீகாரில் முசாபர்பூர் ஆகியவை அடக்கம்.

இந்த ஆய்வறிக்கையின்படி, அதிக மாசுபட்ட நகரம், சீனாவின் சின்ஜியாங். இதற்கு அடுத்த இடங்களில் ஒன்பது இந்திய நகரங்கள் உள்ளன. காசியாபாத் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாகும், அதைத் தொடர்ந்து புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் பிவாரி ஆகியவை உள்ளன. உலகளாவிய நகரங்களின் தரவரிசை அறிக்கை 106 நாடுகளின் PM2.5 தரவை அடிப்படையாகக் கொண்டது, இது தரை அடிப்படையிலான கண்காணிப்பு நிலையங்களால் அளவிடப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை அரசாங்க நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து, சமையல் புகை, மின்சார உற்பத்தி, தொழில், கட்டுமானம், கழிவுகளை எரித்தல் மற்றும் வேளாண் கழிவுகளை எரித்தல் முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கியக் காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து புகை முக்கிய பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'கிரீன்ஸ்பீஸ் இந்தியா'வின் காலநிலை ஆர்வலர் அவினாஷ் சஞ்சல் கூறுகையில், ``டெல்லி உட்பட பல நகரங்களில் பொதுமுடக்கம் காரணமாக காற்றின் தரத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அரசுகள் நிலையானதும், தூய்மையானதுமான எரிசக்தி ஆதாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. தூய்மையான எரிசக்தியும், தூய்மையான போக்குவரத்திற்கான மாற்றத்தை விரைவுபடுத்துவது உயிர்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார தொடர்பான செலவுகளை வியத்தகு முறையில் குறைக்கிறது" என்றார்.

24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்: மக்களவையில் நிறைவேற்றம்

24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்: மக்களவையில் நிறைவேற்றம்

24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.

கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளின் காரணமாக தங்களது கருவினைக் கலைக்க விரும்பினால், 20 வாரங்கள் வரையிலான கருவினைக் கலைப்பதற்கு வழி செய்யும் சட்டங்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து அரசிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா நிறைவேறியுள்ளதன் காரணமாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகள் மற்றும் வல்லுறவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை தாக்கிய மணல் புயல்

சீனாவை தாக்கிய மணல் புயல்!

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளை மணல் புயல் தாக்கியுள்ளது.

சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு மணல் புயல் இன்று தாக்கியுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் வடமேற்கு பகுதிகள் முழுவதும் மணல் காற்று வீசுகிறது. காற்றில் மணல் கலந்து வானம் முழுவதும் புழுதி படிந்துள்ளது. இந்த புயலானது மங்கோலியாவின் மத்திய பகுதிகளுக்கு பரவி, கான்சு, சான்சி, ஏபெய் ஆகிய மாகாணங்களையும் பாதித்துள்ளது என்று சீனா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்யில் காற்றின் மாசுப்பாட்டின் அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுபாட்டின் அளவு 8,000 மைக்கிரோ கிராமாக உள்ளது.

சராசரியாக சிறந்த காற்றின் அளவு 0 முதல் 50 புள்ளிகளாக ஆக இருக்க வேண்டும் மற்றும் தூசியின் அளவு 50 மைக்கிரோ கிராமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது சீனாவில் வீசி வரும் மணல் புயலால் காற்றில் மாசின் அளவு ஆபாயகட்டத்தை எட்டியுள்ளது.

எல்லா ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் மணல் புயல் ஏற்படுவது வழக்கம். ஆனால் இதுபோல் ஒரு மாபெரும் புயல் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காடுகள் அழிக்கபடுவதாலும் மணல் அரிப்பின் காரணமாகவும் இதுபோன்ற இயற்கை சீற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் வால் வீச்சு போட்டி. தமிழக வீராங்கனை பவானி தேவி தேர்வு

ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீராங்கனை பவானி தேவி தேர்வு : வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்!!

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் வாள் சண்டை பிரிவில் பங்கேற்பதற்கு உலக தரவரிசையை கணக்கிட்டு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள 27 வயது பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி தேவி, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்த நட்சத்திரம் ஆவார்.

2019ம் ஆண்டு பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை வாள் வீச்சு போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை கைப்பற்றினார். தற்போது ஹங்கேரியில் நடந்து வரும் வாள் வீச்சு உலக கோப்பையில் ஹங்கேரி அணி கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைய கொரிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் AOR என்ற Adjust official ranking எனப்படும் வழிமுறை மூலமாக பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தரவரிசை மூலம் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது முறையாக அறிவிக்கப்படும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெறுகிறார். தற்போது பவானி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட் நகரில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.

Monday, March 15, 2021

TNPSC Group II மாதிரி வினாத்தாள்

GROUP II மாதிரி வினாத்தாள்

இது தான் வாழ்க்கை

இது தான் வாழ்க்கை..! 

குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன்.

குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா"! என்று குரு அவனிடம் சொன்னார். 

அவன் பட்டாம் பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.

"பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். 

இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. 

சற்று நேரத்துக்கு முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. 

குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:

"இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்"!

வாழ்க வளமுடன்..!

அன்பான வாழ்க்கை வாழ பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அன்பு மிகுந்த பாரதத்தை உருவாக்குவோம்.....!

சிந்து நதி நீர் பகிர்வு பற்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை

சிந்து நதி பகிர்வு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சு

பாகிஸ்தான் - இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1960ல் சிந்து நதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, மேற்கு பகுதியில் உள்ள சட்லஜ், பியாஸ், ரவி நதிகளில் பாயும் நீரை, இந்தியா முழுமையாக  பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா, மேற்கு பகுதியில் பாயும் நதிகளில், சில கட்டுப்பாடுகளுடன், நீர் மின் நிலையங்களை அமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, இரு நாட்டிலும், சிந்து நதி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரு தரப்பும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தும். இந்த சந்திப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லியில் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 23 - 24ல், டெல்லியில் இந்த கூட்டம் மீண்டும் நடக்க உள்ளது. இந்தியாவின் சிந்து நதி கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சிந்து நதி கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்க உள்ளனர்.

TNPSC முதன்மை தேர்வு மாதிரி வினாத்தாள்- தமிழ்

தமிழ் மாதிரி வினாத்தாள்

Sunday, March 14, 2021

எப்படி குளிக்க வேண்டும் என்று தெரியுமா?


*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

நன்றி ....வாழ்க வளமுடன்..

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழர்கள்

உங்கள் கல்லீரலை பாதுகாக்க இதை செய்யவும்

☰

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்


கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.

அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சில வழிகள்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

டான்டேலியன் ரூட் தேநீர்

டான்டேலியன் வேரில் தயாரிக்கப்பட்ட டீயை தினமும் இரு முறை குடித்து வந்தால், கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் இந்த வேர்களைச் சிறிது சேர்த்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது.

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம்

சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள்

தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைகள்

இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம்

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

கீரை, கேரட் ஜூஸ்

அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

சிகரெட், ஆல்கஹால் வேண்டாம்

மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

அவகேடோ மற்றும் வால்நட்ஸ்

கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்

ஆப்பிள், காய்கறிகள்

கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஃப்ளூரைடுக்கு 'நோ'

ஃப்ளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கிரீன் டீ

இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பால் நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)

பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும்.

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.


தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...