Saturday, June 26, 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - நீச்சல் போட்டிக்கு இந்தியர் தேர்வு

டோக்கியோ ஒலிம்பிக் 2020
200M Butterfly பிரிவு நீச்சல் போட்டிக்கு இந்தியாவின் சஞ்சய் பிரகாஷ் தேர்வானார்.
ரோம் நகரில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 1:56:38 நிமிடங்களில் 200மீ தூரத்தை நீந்தியதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற உள்ளார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கூட கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் - WHO எச்சரிக்கை

ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு பரவுவதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மேரி ஏஞ்சலா சிமாவோ தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி போடுவதால் சமுதாய தொற்றை தடுத்து விட முடியாது என்பதால், மக்கள் காற்றோட்டமான இடங்களில் இருப்பதுடன், முக கவசத்தையும் தவறாது அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த இயக்குநர் மேரி ஏஞ்சலா சிமாவோ தெரிவித்துள்ளார்.


ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், மக்கள் கூட்டமான இடங்களை தவிர்த்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றுதல் கட்டாயம்  என்றார்.

டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரசுகள் வேகமாக பரவும் நிலையில், பல ஏழை நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதால் உலக அளவில் இந்த வைரசுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Wednesday, June 23, 2021

செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கான COVAXIN தடுப்பூசி வருகிறது

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை உண்டானால், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லி மற்றும் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மே 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான அனுமதி செப்டம்பர் மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளதாவது:-

குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிலைகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதத்தில் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

Sunday, June 20, 2021

பொது அறிவு தகவல் துளிகள்

பொது அறிவு தகவல்கள்

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Saturday, June 19, 2021

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தும் திட்டம் இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு (2020-21) முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. நோய்த்தொற்று குறையாத காரணத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வியாண்டில் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது தணிந்துவந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடங்கப்பட உள்ளன.

சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில், கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமாக இன்று (சனிக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.

வகுப்புகள் நடத்தப்படும்போது மாணவர்கள் அதை புரிந்துகொள்வதற்கு பாடப்புத்தகங்கள் அவசியம். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Wednesday, June 16, 2021

TNPSC செயலாளராக திருமதி உமா மகேஸ்வரி IAS நியமனம்

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளராக உமா மகேஸ்வரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


மாநிலம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சட்டம் 1954-ன்படி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நந்தகுமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோலத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

அதிக தேசிய பூங்காக்கள் கொண்ட மாநிலம் எது என்று தெரியுமா?

அஸ்ஸாம் அரசு தனது சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் டெஹிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தை மாநிலத்தின் 7 ஆவது தேசிய பூங்காவாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. 

புதிய தேசிய பூங்கா, டெஹிங் பட்காய் மழைக்காடு என்று பிரபலமாக அறியப்படுகிறது

நாட்டில் இப்போது தேசிய பூங்காக்களில் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தலா ஒன்பது தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளன.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Sunday, June 13, 2021

3000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி,

கொரோனா பரவல் குறைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடந்து வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை, முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் சிவகளையில் 2 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் போது, ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. சிவகளையில் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் முதன் முறையாக 3,000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் ஸ்ரீமூலக்கரை பகுதியில் நடந்த ஆய்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கல்வட்டங்கள் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சுமார் பத்துக்கு பத்து என்ற அளவில் ஒவ்வொரு கல்வட்டங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்ணார். தற்போது ஒரு கல்வட்டம் மட்டும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 7 முதுமக்கள் தாழிகள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 முதுமக்கள் தாழிகள் மட்டும் மூடியுடன் காணப்படுவதால் இவை அடுத்தகட்ட ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவீக்கின்றனர்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

Friday, June 11, 2021

தனியாக விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் சீனா

பீஜிங்: தற்போது செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா அதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
'தியான்ஹாங்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தின் பிரதான பகுதி கடந்த ஏப்., 29ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஒரு விண்கலம் மூலம் எரிபொருள், உணவு, வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கான உபகரணங்கள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், மூன்று விண்வெளி வீரர்கள் செல்லவுள்ள 'சென்ஷோ12' விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மார்ச்2எப் ஒய்12 ராக்கெட், வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த ராக்கெட் ஜூன் 16ம் தேதி ஏவ உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

'முதல்முறையாக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ள மூவரும் ஆண்கள்; எதிர்காலத்தில் விண்வெளி வீராங்கனைகளும் அனுப்பப்படுவர்கள்' என சீன விண்வெளி நிறுவனத்தின் அதிகாரியும், சீனாவின் முதல் விண்வெளி வீரரருமான யாங் லிவி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...