Monday, July 12, 2021

விம்பிள்டன் டென்னிஸ் - இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ நேற்று கைப்பற்றினார். 
ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சமிர் பானர்ஜீ 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான விக்டர் லிலோவை வீழ்த்தி கோப்பையை வென்றார். 17 வயதான சமிர் பானர்ஜீ இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/ArulOliPedia?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Facebook Group
TNPSC TIPS
https://www.facebook.com/groups/705473123502357/

Monday, July 5, 2021

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். 
அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல,
இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. 

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும்,
அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். 

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

குட்டியாக இருக்கும் யானையை சின்ன சங்கிலியால் கட்டி வைப்பார்கள் ஆரம்ப நாட்களில் போராடும் சங்கிலியைஅறுக்க முடியாது யானை பெரிதாக வளர்ந்து விடும் அதே குட்டி சங்கிலி ஒரே இழுவையில் சங்கிலி சுக்கு நூறாகிவிடும் ஆனால் முயற்ச்சி செய்யாது 
காரணம் சங்கிலி அறுபடாது என்கிற எண்ணம் அதன் மூளையை மழுங்கடித்தவிடும்
அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது
மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர்ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்துதப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி 

எந்த ஒரு பிரச்சனைக்கும் வெளியிலிருந்து யோசனை சொல்வது எளிது....
ஆனால்...
பிரச்சனையின் மையத்தில் இருப்பவர்களுக்கு....
சில விஷயங்கள் தேவைப்படுகின்றது...

தைரியம்....
நிதானம்....
அமைதி.....
போன்றவை...நல்ல பலன்களை தர வாய்ப்புகள் அதிகம்...


மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/ArulOliPedia?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

Facebook Group
TNPSC TIPS
https://www.facebook.com/groups/705473123502357/

Saturday, July 3, 2021

நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தல் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சில்லறை வணிகத்தில் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், தகவல்களை பாதுகாப்பது, இணைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்த நிறுவனங்களின் திட்டங்கள், நிதி சார்ந்த விதிகளை வகுப்போருக்கு சவால் அளிக்கிறது. 
நமது நாட்டில் அமேசான், கூகுள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சில்லறை வணிகத்திற்கான பண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கருத்தை தெரிவித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj


Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/ArulOliPedia?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...