அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சில்லறை வணிகத்தில் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், தகவல்களை பாதுகாப்பது, இணைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த நிறுவனங்களின் திட்டங்கள், நிதி சார்ந்த விதிகளை வகுப்போருக்கு சவால் அளிக்கிறது.
நமது நாட்டில் அமேசான், கூகுள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சில்லறை வணிகத்திற்கான பண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கருத்தை தெரிவித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link
TNPSC Tips
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt
TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO
TNPSC TIPS 3
https://chat.whatsapp.com/Fb7ILiADXmZ7J4siVyzttj
Telegram Channel link
https://t.me/tnpsctips123
YouTube channel subscription for upcoming videos
https://youtube.com/c/ArulOliPedia?sub_confirmation=1
WEBSITE
arulolipedia.blogspot.com
No comments:
Post a Comment