Monday, November 30, 2020

ஜெகதீச சந்திர போஸ்

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

சர் ஜகதீஷ் சந்திர போஸ், CSI, CIE, FRS
J.C.Bose.JPG
ஜகதீஷ் சந்திர போஸ், லண்டன் ராயல் கழகம்
பிறப்பு
நவம்பர் 30, 1858
மைமென்சிங், East Bengal (now வங்காளதேசம்), India
இறப்பு
23 நவம்பர் 1937 (அகவை 78)
Giridih, Bengal Presidency, இந்தியா
வாழிடம்
இந்தியா
தேசியம்
இந்தியன்
துறை
இயற்பியல், உயிர் இயற்பியல், உயிரியல், தாவரவியல், தொல்பொருளியல், வங்காள இலக்கியம், Bangla Science Fiction
பணியிடங்கள்
Presidency College
ஆய்வு நெறியாளர்
John Strutt (Lord Rayleigh)
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
சத்தியேந்திர நாத் போசு
அறியப்படுவது
Millimetre waves
வானொலி
கிரெஸ்கோகிராஃப்
வாழ்க்கைக் குறிப்பு தொகு
போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான அவர் 1859ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தமது கல்வியைக் கொல்கத்தா, கேம்பிரிட்ஜ, லண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தார். 1885இல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை, போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார். இவரது மனைவி பிரபல சமூக சேவகி அபலா போஸ்

பள்ளி படிப்பு 
பட்டப் படிப்பு 
ஆராய்ச்சி 
கலையார்வம் மற்றும் நட்பு வட்டம் 
பிற செயல்பாடுகள் தொகு
கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை அங்கு செய்து தந்தார். போஸின் பல்வேறு அறிவியல் சாதனைகளையும், ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும், குறிப்பாகத் தாவர இனங்களில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் பாராட்டி கல்கத்தா மக்கள் கழகம் அவருக்கு 1928ஆம் ஆண்டு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அப்போது அவர் பின்வருமாறு கூறினார்:

“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
நவம்பர் 30, 
வரலாற்றில் இன்று.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடித்த வங்கத்து விஞ்ஞானி சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று.

* வங்காளத்தின் (தற்போதைய வங்கதேசம்) விக்ரம்பூரில் பிறந்தவர். எதையும் உற்றுநோக்கும் குணமும், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இயற்கையிலேயே இருந்தது. ஓயாமல் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லக்கூடிய தந்தை கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்.

* பட்டப்படிப்பை முடித்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்றார். வைஸ்ராய் சிபாரிசுடன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியர்கள் திறன் குறைந்தவர்கள் என்ற பிரிட்டிஷ் அரசு, அதே பதவி வகிக்கும் ஆங்கிலேயரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் கொடுக்கப்படும் என்றது.

* கஷ்டமான சூழலிலும், தன்மானத்தை விட்டுக்கொடுக்காத போஸ் 3 ஆண்டுகள் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார். அறிவாற்றல், கற்பிக்கும் திறனால் பேரும் புகழும் பெற்றார். தவறை உணர்ந்த கல்வித் துறை இயக்குநர் தனது முயற்சியால் முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கான 3 ஆண்டு ஊதியத்தையும் மொத்தமாக வழங்கியது அரசு.

* இந்த பணத்தில் தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். தன் ஆயுள் முழுவதையும் ஆராய்ச்சிக்கே அர்ப்பணிப்பது என 1894-ல் முடிவெடுத்தார். முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ந்தார். மின் அலைகள், கம்பிகளின் உதவியின்றி பொருட்களைக் கடந்து செல்லக்கூடியவை என்று கண்டறிந்தார்.

* மின்காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மைகளை (quasi-optical) கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தார். மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட நுண்ணலைகளை உருவாக்கும் இயந்திரத்தை முதன்முதலில் வடிவமைத்தார்.

* போட்டோகிராபிக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் ராயல் சொசைட்டி இதழில் வெளிவந்தன. லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டம் வழங்கியது.

* பல நாடுகளின் அறிவியல் கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின. விருதுகள் குவிந்தன.

* இவரது ஆராய்ச்சி தாவரவியல் பக்கம் திரும்பியது. தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சிகள் உண்டு என்பதை ஆதாரங்களுடன் பாரீஸ் மாநாட்டில் நிரூபித்தார். இந்த உண்மைகளை கண்கூடாகக் காட்ட உதவும் ‘ரெஸனன்ட் ரெக்கார்ட்’, ‘கிரெஸ்கோகிராப்’ ஆகிய கருவிகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார்.

* ‘ரெஸ்பான்ஸ் இன் லிவிங் அண்ட் நான் லிவிங்’, ‘த நெர்வஸ் மெக்கானிஸம் ஆப் பிளான்ட்ஸ்’ ஆகிய 2 நூல்களும் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.

* ஆண்டு வருமானத்தில் தனது அத்தியாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செலவழித்தார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் உயில் எழுதிவைத்த இந்த தேசபக்த விஞ்ஞானி 79 வயதில் காலமானார்

100 ஆண்டுகள் பழமையான பாய்மரக் கப்பல்

100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்!

கடந்த 80 வருடங்களாக மாலுமிகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரஷ்யாவின் SEDOV என்ற பாய்மரக் கப்பல், ஆர்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகளுக்கு இடையே தனது கடினமான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது. 100 வயதை எட்டியுள்ள அந்தக் கப்பல் குறித்த சிறிய தொகுப்பை தற்போது காணலாம் ..

STS SEDOV என அழைக்கப்படும் பாய்மரக் கப்பல், ஜெர்மனியால் கடந்த 1921ம் ஆண்டு கட்டப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில், ஜெர்மன் சரணடைந்த நிலையில், அந்தக் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து, அதனை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

ரஷ்யா அதனை கடற்படை மாலுமிகளுக்கு பயிற்சி தரும் கப்பலாக மாற்றி பயன்படுத்தி வருகிறது. கடந்த 75 வருடங்களாக ரஷ்ய கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வரும் இந்தக் கப்பலை, எலும்பை தாக்கும் அளவிற்கு குளிர் நிலவும் ஆர்ட்டிக் கடலின் வடக்கு பகுதி வழியே இயக்கி, உலகைச் சுற்றிவர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த ஒரு வருடமாக கடுங்குளிர் நிலவும் பகுதிகள் வழியே பயணித்து, ரஷ்யாவின் kaliningard என்ற பகுதியை அடைந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்ட பல்வேறு துறைமுகங்களுக்கு செல்லாவிட்டாலும், பயணம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக, கப்பலில் பயணித்த பயிற்சி மாலுமிகள் தெரிவித்தனர்.

சவாலான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பாய்மரக் கப்பலை, வான வெடிகள் வெடித்து அந்நாட்டினர் வரவேற்றனர். கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கும் இந்தக் கப்பல், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, November 27, 2020

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 செயல்கள்

வாழ்க்கையில் கவனம் வை

வாழ்க்கை 🌹

வாழ்ந்தாலும் பேசும் உலகம்...
தாழ்ந்தாலும் பேசும்  உலகம்...

ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். 

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். 

அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா.

விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்." 

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும். 

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள். 
ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும். வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை" என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது....

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.  

போர் வீரர்கள்  சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். 

பேரரசர்  முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின்  கைகளில் கொடுக்கப்பட்டது. 

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து  உற்சாகப் படுத்தினர். 

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். 

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.  

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க  சுற்றுப்புறத்திலிருந்து *கூச்சலும், பரிகாசமும்,* ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது. எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை  *வெற்றியோடு* ஓடி🏃 முடித்தான் இளவரசன்.

இளவரசனை பாராட்டிய பேரரசர்,

□இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.  

□உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். 

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?

என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,
தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை. 

"எனது கவனமெல்லாம் தண்ணீரில்  அல்லவா இருந்தது." 

விடுதலையோடு  கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். 

இளவரசனே...

*பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் 
உன் *வாழ்க்கை"

*வாழும்  நாட்களிலே  உன் வாழ்க்கையில் கண்ணும்  கருத்துமாக இருந்து கடைசியில்  அதை சிறந்த முறையில் வாழ வேண்டும்

□போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே....
□தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.

வாழ்க்கையில்  கவனம் வை* என்றார்.

Wednesday, November 25, 2020

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்

* இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்:*

WhatsApp group link
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

Telegram Channel link
TNPSC Tips
TNPSC Exam study material and tips
https://t.me/tnpsctips123

For Subscribe

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.

2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.

2010 நவ., 1: 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.

2011 டிச.,: 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.

2012 அக்., 31: 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.

2016 டிச., 12: 'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள்சேதமடைந்தன.

2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

2018 நவ., 18: 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன.

2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், புதுச்சேரிக்கு அருகில்  கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 24, 2020

நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜுரணம் குணமாக இதை செய்யுங்கள்

அஜீரணம் / நெஞ்செரிச்சல் முற்றிலும் போக்க இயற்கை கை வைத்தியங்கள்

மருத்துவ குறிப்பு 1
ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு பறந்து போகும்.

மருத்துவ குறிப்பு 2
உணவு அருந்திய பின் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அஜீரணம் நீங்கும். இதனாலேயே நம் முன்னோர்கள் உணவருந்திய பின் வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

மருத்துவ குறிப்பு 3
சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் தலா 100கிராம் எடுத்துக்கொண்டு அதை பொடி செய்து உணவருந்தும் முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் கோளாறு நீங்கும்

மருத்துவ குறிப்பு 4
நெல்லிக்காய் சாறில் மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து காலையில் வெறும் கயிற்றில் குடித்து வர அஜீரணம் நீங்கும். அதோடு குடலும் வலுவடையும்.

மருத்துவ குறிப்பு 5
சுக்கு, மிளகு, திப்பிலி, பெரும்காயம் ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு பொரித்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர அஜீரணம் கோளாறு அகலும் அதோடு வாய்வு தொல்லையும் நீங்கும்.

தலையணை தேவையா?

*தலைக்கு தலையணை வைத்து தூங்கலாமா ?*

👉 இன்றைய சூழ்நிலையில் பலருக்கு தலையணை இல்லாத தூக்கம் என்பது உப்பில்லாத உணவு போலதான் அவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

👉 தலையணை வைத்து உறங்குவது என்பது நமது உடலுக்கு சுகமானதாக இருந்தாலும், அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 

👉 தலையணை வைத்து உறங்கும் பழக்கம் என்பது ஆதி வாசிகளிடமோ, அதன் பின்னர் வந்தவர்களிடமோ இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

👉 சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே மிருதுவான தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.

👉 நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ, அதுபோலத்தான் உறங்கும் போதும், மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும்.

👉 அப்படிப்படுக்கும் போது, எக்காரணத்தைக் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்துதான் தூங்க வேண்டும்.

👉 மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைப்பது ஆகியவற்றால், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

👉 அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்புகளில் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கிறதாம். 

👉 என்னால் தலையணை இல்லாமல் ஒருநாளும் தூங்க முடியாது என்பவர்கள், தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.

👉 நாம் தான் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதைக் குறைத்து, தலையணை இல்லாமல் சமமான தரையில் உறங்க பழகிடுவோம்.

👉 அதுமட்டுமல்லாமல், தலையணை வைத்து தூங்குவது நல்லதில்லை என்பதை அடுத்த தலைமுறையினருக்கு அழுத்தமாகச் சொல்லி அவர்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடுவோம்.

Monday, November 23, 2020

சூரியனுக்கு Good Bye சொன்ன ஊர் எது என்று தெரியுமா?

இனி 2021இல் பார்க்கலாம் என்று சூரியன் Goodbye சொல்லும் ஊர் எது தெரியுமா?

உலகின் ஒரு நகரத்தில் இன்று அஸ்தமித்த சூரியன் இனி 60 நாட்கள் கழித்துத்தான் உதிக்கும். சூரியனின் பாராமுகம் காணும் நாடு எது தெரியுமா? அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இயற்கைக்கு சொல்லி வைத்த மூதுரை சூரியனுக்கும் பொருந்துமே, 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சூரியன் எங்கே போகிறார், இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுகிறதா?

அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் தான், இன்று விடைபெற்று செல்லும் சூரியன் இனி 60 நாட்கள் கழித்து உதிக்கும். அப்போது தான் அங்கு அடுத்த பகல் வரும். அதுவரை அந்த நகரம் இருள்சூழ் நகரம் தான்…

பாரோ (Barrow) என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் (Utqiagvik) நகரில், 2020 ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் தேதி அஸ்தமித்து bye சொன்ன சூரியன்60 நாட்களுக்கு பிறகு தான் hi சொல்லும்.

ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் இருளின் குகைக்குள் நுழைந்துவிட்டது. இந்த நிகழ்வு துருவ இரவு (polar night) என்று அழைக்கப்படுகிறது. பூமியின் அச்சின் சாய்வின் காரணமாக இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடைபெறுகிறது என்று சி.என்.என் (CNN) தெரிவித்துள்ளது.

பகலே இல்லாமல் இரவு மட்டுமே 24 மணி நேரமும் நீடிக்கும் நிலைமை பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த துருவ இரவு (polar night) துருவ வட்டங்களுக்குள் (polar circles) மட்டுமே நிகழ்கிறது.

"துருவ இரவு என்பது ஒவ்வொரு குளிர்காலத்திலும் பாரோ (உத்கியாக்விக்) மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள வேறு எந்த நகரங்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். இந்த சாய்வு சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேலே தெரியாதபடி செய்கிறது" என்று சி.என்.என் வானிலை ஆய்வாளர் அலிசன் சின்சார் கூறினார்.

சூரியனே இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று திகைப்பாக இருக்கிறதா? இது குறித்து சி.என்.என் வானிலை ஆய்வாளர் விளக்கமாக சொல்கிறார். சூரியன் தெரியவில்லை என்றாலும், அந்த நகரம் காரிருளில் மூழ்கியிருகாது. பெரும்பாலான பகல்நேர நேரங்கள் சிவில் ட்விலைட் (civil twilight) என்று அழைக்கப்படும் மெல்லொளி, அதாவது மங்கலான வெளிச்சம் தென்படும் என்று காலங்களில் செல்லும் என்று சின்சார் கூறினார்.

"சூரிய உதயத்திற்கு சற்று முன்னதாகவோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் வானம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதைத்தான் அந்த நகரவாசிகள் பார்க்க முடியும். அதாவது பகலவனை பகல் நேரத்தில், இந்தக் கோலத்தில் தான் தரிசிக்க முடியும். நவம்பர் 20 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை பாரோ (Barrow) நகரை சூரியன் நேரடியாக பார்க்க மாட்டார்" என்று சின்சார் கூறினார்.

இருப்பினும், இந்த நிகழ்வு இந்த ஊருக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இது துருவ இரவு நகரங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடிக்கும் நகரம் பாரோ (Barrow).

Sunday, November 22, 2020

வாழையின் மருத்துவ குணங்கள்

https://www.youtube.com/c/TindivanamTimes

*வாழைக்காயின் மருத்துவ குணங்கள்.*


வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும்மாவுச்சத்தும் உள்ளது.

பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு.


மேலும் வாழைக்காயுடன் மிளகு,சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.

வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல்,கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால்,உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி,அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.

வாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து,ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும்,நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

வழைக்காயில் விட்டமின்,கால்சியம்,மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்கள் நம்மை ஆண்ட விடாமல் தடுக்கிறது.

வாழைக்காயில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது.

சாப்பிட உடனே குளிக்க கூடாது. ஏன் என்று தெரியுமா?

https://www.youtube.com/c/TindivanamTimes
சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது என ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

பொதுவாக நம் வீட்டில் பெரியவர்கள் சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என சொல்வார்கள். அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் பலருக்கும் தெரிவது இல்லை. ஆனாலும் நம்மில் பலரும் சாப்பிட்டதும் குளிக்கிறோம்.

குளித்துவிட்டு காலைச் சாப்பாட்டில் கைவைப்பது உத்தமம். ஆனால் பலரும் அப்படிச் செய்யாமல் சாப்பிட்ட பின்பு குளிக்கச் செல்வதையும் பார்க்கிறோம்.

பொதுவாகவே சாப்பிட்ட உடனே குளித்தால் உடலில் இரத்த ஓட்டத்தை அது குறைக்கும். அப்படி குறையும்போது செரிமானம் தாமதம் ஆகும். இதனால் நாம் சாப்பிட்ட சாப்பாடு உணவுக்குடலில் அப்படியே நொதித்து அழுகிவிடும். இது நம் இயக்கத்தை மந்தமாக்கும். கூடவே மலச்சிக்கல், குமட்டல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். பொதுவாகவே நாம் சாப்பிட்ட பின்பு உடலில் ஆற்றல் செயல்படுத் துவங்கும். இதனால் நாம் உண்ட உணவு எரிந்துபோகும். அதனால் தான் ஆயுர்வேதம் இதனை நெருப்பு என்கிறது. ஆனால் இந்த ஓட்டத்துக்கு மாறாக நாம் தண்ணீரை விட்டு குளித்து, உடலுக்கு குளிர்ச்சியை தந்துவிடுவதாகக் கூறுகிறது ஆயுர்வேதம்.
அதேநேரம் நம் தமிழர் மருத்துவம் சாப்பிட்ட 2 மணிநேரத்துக்கு குளிக்கவேண்டாம் எனவும், அறிவியலோ சாப்பிட்டு 35 நிமிடங்களுக்கு குளிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறது. இனி நீங்களும் சாப்பிட்ட உடனே குளிக்க மாட்டீர்கள் தானே?

அண்டார்டிகாவில் உள்ள பெரிய ஏரி பற்றி தெரியுமா?

YouTube channel link
https://www.youtube.com/c/TindivanamTimes

🅾️✳️அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்திருக்கும் மிகப்பெரிய நன்னீர் ஏரி!⛔️


#LargestLake

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனிப்பாறைகள் உறைந்திருந்தன. கண்ட எல்லைகள் கிடையாது. கடல்கள் கிடையாது. 

பூமி மிகப்பெரிய பனி உருண்டை போலத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பனிக்காலம் முடிவடைந்தபோது இந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள் உருகி புதிய நிலப்பரப்புகள் உருவாகி இருக்கின்றன. 

இப்படி உருகிய நீர் பள்ளமான இடங்களில் தேங்கி பெருங்கடல்களாக உருவெடுத்துள்ளன. காலப்போக்கில் அவை உப்புத்தன்மை கொண்டவையாக மாற நன்னீரின் அளவு குறைந்துவிட்டது. 

ஆனால் கண்டப்பெயர்வு காரணமாக சில நேரங்களில் பூமிக்கு இடையடுக்குகளில் நீர்நிலைகள் புதைந்து போகும். அப்படி ஒன்றைத்தான் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தான் இந்த புதை நன்னீர் ஏரி பற்றித் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அட்லாண்டிக் கடலில் சுமார் பத்து நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

எலெக்ட்ரோ மேக்னடிக் சென்சார்கள் பொருத்தப்பட்ட சிறிய வகை படகு ஒன்று நியூ ஜெர்சியிலிருந்து மாஸச்சஸட்ஸ் வரை பயணித்திருக்கிறது. 

இதில் கிடைத்துள்ள தரவுகளைக்கொண்டு நன்னீர் ஏரியின் அளவை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராழியியல் வல்லுனர்கள். 

அட்லாண்டிக் கடலில் சுமார் 600 அடிக்கு கீழாக சுமார் 50 மைல் அளவிற்கு பரவியிருக்கும் இந்த நீர்நிலை ஒன்டாரியோ ஏரியை விட இரண்டு மடங்கு பெரிதாகும். 

பொதுவாகவே கண்டத்தட்டுகள் இடப்பெயர்ச்சி அடையும்போது நிலத்திற்கு அடியில் இப்படி நன்னீர் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இவை நன்னீர் என்று அழைக்கப்பட்டாலும் நாம் குடிக்கும் நீரைப்போன்று அவை இருப்பதில்லை. ஆனால் கடல் நீரைப்போன்று உப்பாகவும் இவை இருக்காது. 

மாறாக கடல் நீரைப்போன்று உப்பாகவும் இவை இருக்காது. மாறாக கடல் நீரின் உவர் தன்மையில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் இந்த நீரில் உப்பு இருக்கும். இதுவே நிலப்பரப்பிற்கு அருகில் இருந்தால் அவை குடிநீர் போலவே இருக்கும்.

Tuesday, November 17, 2020

சிறுநீர் பற்றிய சீக்ரெட்

உங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு? அதுக்கு என்ன அர்த்தம்? தெரிஞ்சிக்கோங்க!


சிறுநீர், மலம் என்பது நம் உடலில் இருந்து தேவையற்ற கழிவுப் பொருட்களாக வெளியேற்றப்பட்டாலும், அதை வைத்து நம்முடைய உடலில் உள்ள நோய் பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். அதனால் தான் நாம் மருத்துவமனைக்குச் சென்றால் உடனடியாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மலப்பரிசாதனை ஆகியவற்றுக்குப் பரிந்துரைக்கிறார்கள

அதில் சிறுநீரைப் பொருத்தவரை, அது வெளியாகும் நிறத்தை வைத்தே உடலில் எந்த உறுப்புகளில் நோய்த் தொற்றுக்ள இருக்கும் என்பதைக் கண்டுபிடித்விட முடியும்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முறை சிறுநீர் கழிப்பது சாதாரண இயல்பான ஒன்று தான். அதைவிட அதிகமாகவோ குறைவாகவுா சிறுநீர் கழித்தல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியக் குறைபாடாக உள்ளது என்பது பொருள்.

ஒருவரின் சிறுநீரின் நிறத்தை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

⚪️ வெள்ளை

வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், சுத்தமாக உள்ளது என்றும் அவர்களின் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது

💡 வெளிர் மஞ்சள்

வெளிறிய மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தால், அது அவர்களின் உடம்பில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளதை வெளிப்படுத்துகிறது.


🔶 அடர் மஞ்சள்

மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், அது அவர்களின் உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது என்பதன் அறிகுறி.

🏷 பழுப்பு சிறுநீர்

பழுப்பு நிறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அது கல்லீரல் தொற்று மற்றும் அவர்களின் உடம்பில் பழைய ரத்தம் உள்ளது என்று பொருள்

🔴 சிவப்பு அல்லது பின்க்

தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது என்றும் சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்.

🔵 நீலம் அல்லது பச்சை

நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேற்றப்பட்டால், அது அவர்கள் தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் மற்றும் உணவில் அதிகப்படியான சாயம் கலந்திருக்கிறது என்பதைக் குறிக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது, இனிப்பு வாசனை தென்பட்டால், அது அவர்களுக்கு நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.

TNPSC Tips
TNPSC Exam study material and tips
https://t.me/tnpsctips123

WhatsApp chat
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

தண்ணீர் தண்ணீர்

💧வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்💧


• அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும்.

• அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.

• தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.


• தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

• பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும், அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனை சரியாகும்.

• காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.


• வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

• எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

• குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.
TNPSC Tips
TNPSC Exam study material and tips
https://t.me/tnpsctips123
WhatsApp chat
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

எவ்வாறு நாம் உறங்க வேண்டும்?

படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்  படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
குப்புற படுக்கக் கூடாது.
நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.
உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.
படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.
கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.
TNPSC Tips
TNPSC Exam study material and tips
https://t.me/tnpsctips123

https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

Thursday, November 5, 2020

இந்தியா இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்

சுகாதாரம், மருத்துவ துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டாக்டர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும் மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்துவதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இமாசலபிரதேச மாநிலம் சிம்லா, குலு மாவட்டங்களில் சட்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 210 மெகாவாட் நீர்மின் திட்டத்தில் ரூ.1,810 கோடி முதலீட்டுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வானியல் துறையில் ஒத்துழைப்பதற்காக இந்தியா-ஸ்பெயின் இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில், இந்தியா சார்பில் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, மந்திரிசபை கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

கிங் கோலி

கிரிக்கெட் உலகின் பேட்ட... ரன் மிஷின் விராட் கோலியின் பிறந்த நாள்...

இன்றைய கிரிக்கெட் உலகில் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் கோலி எடுத்து வரும் ஒவ்வொரு ரன்னுமே ‘சாதனை மேல் சாதனை’யாக அமைந்து வருகிறது. இன்றைய தேதிக்கு கிரிக்கெட் உலகில் பெரிய ஆட்டக்காரர் என்றால் அது கோலி தான்.

“அவசரக்காரர், கோபக்காரர், ஆக்ரோஷமானவர், பக்குவமில்லாதவர், ஜென்டில்மேன்களின் விளையாட்டான கிரிக்கெட்டை விளையாடவே தகுதியில்லாதவர்” என கோலியை பார்த்து வசைபாடி வந்த அதே கூட்டம் தான் ‘இளம் வயதில் இப்படியொரு சாதனையா’என இன்று வாழ்த்து சொல்ல வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் காத்துக் கிடக்கிறது. அந்த அளவிற்கு தன்னை நோக்கி வந்த அத்தனை விமர்சனங்களுக்கும் தனது பேட்டாலே பந்துகளை பஞ்சர் செய்து புத்தி சொன்னர் விராட் கோலி.

இன்று அவருக்கு பிறந்த நாள்.

கடந்த 1988ல் இதே நாளில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தான் இந்திய கிரிக்கெட்டின் தலைமகனான கோலியும் பிறந்தார். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட கோலியின் அப்பா பிரேம் கோலி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வந்ததால் குடும்பத்துடன் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் செட்டிலாகி இருந்தார்.

அண்ணன் விகாஷ், அக்கா பாவனாவுக்கு அடுத்தப்படியாக பிறந்த கடைக்குட்டி சிங்கமான கோலி தான் வீட்டில் செல்லப்பிள்ளை.

மூன்று வயதிருக்கும் போதே கையில் பேட்டை எடுத்து வாள் போல சுழற்றியுள்ளார்.

‘அவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது யாரை பார்த்தாலும் பந்தை போடும்படி சொல்லி பேட்டிங் செய்வான்’ என கோலியின் அண்ணன் விகாஷ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.

அப்படி கல்லி கிரிக்கெட்டில் கில்லியாக தனது நண்பர்களோடு சுற்றி வந்த கோலிக்கு “முறையான கிரிக்கெட் பயிற்சி கொடுத்தால் அவனது ஆட்டம் வேற லெவல்” என அக்கம்பக்கத்தினர் செல்லமாக வற்புறுத்த 1998 வாக்கில் டெல்லியில் இயங்கி வந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்து விட்டுள்ளார் கோலியின் அப்பா.

அன்று அவர்கள் மட்டும் கோலியை பயிற்சியில் சேர்த்து விடும்படி சிபாரிசு செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் கிடைக்காமல் போயிருக்கலாம்.

‘கோலியை அடக்கவே முடியாது. எப்போதுமே துருதுவென வண்டு போல பறந்து கொண்டே இருப்பான். அதிலும் கிரிக்கெட் களம் என்று வந்துவிட்டால் ரீங்காரமிட்டு பறப்பது அவன் ஸ்டைல். டாப்-ஆர்டர், மிடில்-ஆர்டர் என எங்கு இறக்கி விட்டாலும் ரன்களை சேர்த்து அசத்துவான். படிப்பிலும் அவன் படு சுட்டி’ என சர்டிபிகேட் கொடுக்கிறார் கோலியின் ஆரம்ப கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா.

வட்டம், மாவட்டம், மாநிலமென டெல்லி கிரிக்கெட்டில் படிப்படியாக கோலி முன்னேற காரணமே அவரது அப்பா கொடுத்த ஊக்கமும், உத்வேகமும் தான். அதன் மூலம் 2002ல் பதினைந்து வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம்பிடித்தார். நான்கே ஆண்டுகளில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அசராமல் கோலி ஆடிய ரன் வேட்டையை பார்த்து அசந்து போன இந்திய கிரிக்கெட் தேர்வாணையம் கோலியை பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்க இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்து விட்டு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.

அதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் ஆட வேண்டுமென கனவு மட்டுமே கொண்டிருந்த கோலிக்கு அந்த கனவை கட்டாயமாக செய்து மெய்ப்பிக்க வேண்டுமென்ற உந்துதல் வர காரணமே அவரது அப்பாவின் மரணம் தான்.

அந்த துயரமான சம்பவத்தின்போது கோலிக்கு 18 வயதிருக்கும். டெல்லி அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்திருக்கிறார். கர்நாடகாவுக்கு எதிரான தொடரில் டெல்லி அணி தோல்வியின் விளிம்பில் தவித்து கொண்டிருக்க அப்பாவின் மரண செய்தியை தனக்குள் வைத்து கொண்டு 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்த பின்னர் தான் அப்பாவின் இறுதி சடங்கில் கோலி பங்கேற்றார்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் எதை பற்றியுமே சிந்திக்காமல் கிரிக்கெட் களமே கதி என கிடந்து தனது பேட்டை பட்டை தீட்டியுள்ளார் கோலி. அதன் மூலமாக 2008 வாக்கில் மீண்டும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார்.

அதற்கடுத்த சில மாதங்களில் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் கேப்டன் பொறுப்பும் கோலிக்கு வழங்கப்பட்டது. அணியை துடிப்போடு வழிநடத்திய கோலி இந்திய அணியை உலக சாம்பியனாக ஜொலிக்க செய்தார்.

அதன் மூலம் இந்திய தேர்வாணையத்தின் கவனத்தை தன்பக்கமாக ஈர்த்து இந்திய அணிக்குள் அதே ஆண்டில் இடம் பிடித்தார்.

துவக்கத்தில் இந்திய அணியில் மாற்று வீரராக களம் இறங்கினாலும் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார் கோலி.

ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சராசரியாக 50 ரன்களை குவித்து 1,500 ரன்களை மூன்றே ஆண்டுகளில் எடுத்து ‘சேசிங் மன்னன்’, ‘50 ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெயரை பெற்றார் கோலி.

2009ல் இலங்கைக்கு எதிரான தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் கோலி. அவரது பேட்டிங்கை பார்த்து அசந்து நின்ற சீனியர் வீரர்களான சச்சினும், சேவாக்கும் இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை தொடரில் கோலியை அணியில் நிச்சயம் சேர்க்க வேண்டுமென தேர்வாணையத்திற்கு கட்டளையிட அதன்படியே கோலியும் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டார். ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக தன் பங்கிற்கு கோலி ரன்களை சேர்க்க இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

அதன் பின்னர் 2012ல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற 329 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் சச்சின், தோனி என சீனியர்களோடு கைகோர்த்து தனி ஒருவராக அணியின் ரன்களை உயர்த்தியதோடு 183 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டதோடு ‘சேஸிங் புலி’ என்ற பெயரை பெற்றார்.

அந்த ஒரு ஆட்டம் உலகளவில் கோலியை அடையாளம் காட்டியது. இன்று வரை கோலியின் சிறந்த ஸ்கோரும் அது தான்.

அதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் கோலி.

‘கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு சரிபட்டு வர மாட்டார்’ என விமர்சனங்கள் எழ அதற்கும் டேட்டாலே பதில் சொன்னார் கோலி.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என கிரிக்கெட் ஆடி வரும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் வெவ்வேறு கண்டங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 70 சதங்களை அடித்துள்ளார்.

அதில் கோலியின் பேவரைட் லிஸ்டில் இருப்பது ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் 2014ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அடித்த சதம் தான்.

அந்த தொடரின போது தான் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.

ஆண்டிற்கு சராசரியாக ஆயிரம் ரன்கள் வீதம் இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே 7 முறை ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் கோலி. ‘நாம் எது செய்ய நினைத்தாலும் அதை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அதற்காக நேரம் காலம் பார்க்காமல் தீவிரமாக உழைக்க வேண்டும். ஒரு சிலர் நாம் நமது இலக்கை அடைய கூடாது என நமது கவனத்தை திசை திருப்பினாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது முயற்சியை தன்னம்பிக்கையோடு மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கம் தான். நான் எனது கிரிக்கெட் கெரியரில் ஜொலிக்க இது தான் காரணம்’ என தனது சக்சஸுக்கான ரகசியத்தை கோலி அசால்டாக சொன்னாலும் தன்னம்பிக்கையும், மனோபலமும் தான் அவரது வெற்றிக்கு காரணம்.

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் தன்னம்பிக்கையின் மறுஉருவம் தான் கோலி.

ரோபோ போல ரன் மெஷினாக களத்தில் அசராமல் ஓடி வரும் கோலியின் மூளையில் ரன் எடுப்பதற்காக மட்டுமே புரோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் என விராத் கோலி ரன் குவிப்பில் ஈடுபடும் போது ரசிகர்கள் பேசிக்கொள்வதுண்டு.

அதிலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் கோலி முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அவரது ஆட்டமே மாறிவிட்டது. அதுவரை இந்திய அணியின் வீரனாக மட்டுமே வெற்றிக்காக போராடி வந்த கோலி ஒரு கேப்டனாக அதை செய்து வருகிறார்.

‘கிரிக்கெட் களத்தில் என்னை அப்படியே பிரதிபலிக்கிறார்’ என கிரிக்கெட்டின் காட்பாதரான விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்துள்ளதன் மூலம் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கிறார் கிங் கோலி.

ஆள் தி பெஸ்ட் கோலி…

ஹேப்பி பர்த் டே…

Tuesday, November 3, 2020

Abbreviations

Useful information 
🕸🕸🕸🕸🕸🕸🕸
1. *PAN* - permanent account number.
2. *PDF* - portable document format.
3. *SIM* - Subscriber Identity Module.
4. *ATM* - Automated Teller machine.
5. *IFSC* - Indian Financial System Code.
6. *FSSAI(Fssai)* - Food Safety & Standards Authority of India.
7. *Wi-Fi* - Wireless fidelity.
8. *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
9. *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
10. *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
11. *COMPUTER* - Common Oriented Machine. Particularly United and used under Technical and Educational Research.
12. *VIRUS* - Vital Information Resources Under Siege.
13. *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
14. *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
15. *OLED* - Organic light-emitting diode.
16. *IMEI* - International Mobile Equipment Identity.
17. *ESN* - Electronic Serial Number.
18. *UPS* - Uninterruptible power supply.
19. *HDMI* - High-Definition Multimedia Interface.
20. *VPN* - Virtual private network.
21. *APN* - Access Point Name.
22. *LED* - Light emitting diode.
23. *DLNA* - Digital Living Network Alliance.
24. *RAM* - Random access memory.
25. *ROM* - Read only memory.
26. *VGA* - Video Graphics Array.
27. *QVGA* - Quarter Video Graphics Array.
28. *WVGA* - Wide video graphics array.
29. *WXGA* - Widescreen Extended Graphics Array.
30. *USB* - Universal serial Bus.
31. *WLAN* - Wireless Local Area Network.
32. *PPI* - Pixels Per Inch.
33. *LCD* - Liquid Crystal Display.
34. *HSDPA* - High speed down-link packet access.
35. *HSUPA* - High-Speed Uplink Packet Access.
36. *HSPA* - High Speed Packet Access.
37. *GPRS* - General Packet Radio Service.
38. *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
39. *NFC* - Near field communication.
40. *OTG* - On-the-go.
41. *S-LCD* - Super Liquid Crystal Display.
42. *O.S* - Operating system.
43. *SNS* - Social network service.
44. *H.S* - HOTSPOT.
45. *P.O.I* - Point of interest.
46. *GPS* - Global Positioning System.
47. *DVD* - Digital Video Disk.
48. *DTP* - Desk top publishing.
49. *DNSE* - Digital natural sound engine.
50. *OVI* - Ohio Video Intranet.
51. *CDMA* - Code Division Multiple Access.
52. *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
53. *GSM* - Global System for Mobile Communications.
54. *DIVX* - Digital internet video access.
55. *APK* - Authenticated public key.
56. *J2ME* - Java 2 micro edition.
57. *SIS* - Installation source.
58. *DELL* - Digital electronic link library.
59. *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
60. *RSS* - Really simple syndication.
61. *TFT* - Thin film transistor.
62. *AMR*- Adaptive Multi-Rate.
63. *MPEG* - moving pictures experts group.
64. *IVRS* - Interactive Voice Response System.
65. *HP* - Hewlett Packard.

*Do we know actual full form of some words???* 
66. *News paper =* 
_North East West South past and present events report._
67. *Chess =*
_Chariot, Horse, Elephant, Soldiers._
68. *Cold =*
_Chronic Obstructive Lung Disease._
69. *Joke =*
_Joy of Kids Entertainment._
70. *Aim =*
_Ambition in Mind._
71. *Date =*
_Day and Time Evolution._
72. *Eat =*
_Energy and Taste._
73. *Tea =*
_Taste and Energy Admitted._
74. *Pen =*
_Power Enriched in Nib._
75. *Smile =*
_Sweet Memories in Lips Expression._
76. *etc. =*
_End of Thinking Capacity_
77. *OK =*
_Objection Killed_
78. *Or =*
_Orl Korec (Greek Word)_
79. *Bye =*♥️
_Be with you Everytime

Monday, November 2, 2020

எட்டாம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.1 வினா எண் 6

எட்டாம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.1 வினா எண் 6

நல்லது செய் தவறு தானாக மறையும்

*தினம் ஒரு கதை!*

*"நல்லது செய் தவறு தானாக மறையும்"*

_(முழு பூசணிக்காயைய் சோற்றில் மறைப்பது போல என்று திட்டுவதற்க்கு மட்டும் பயன்படுத்துவார்கள். )_

 ஒரு ஊரில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் பூசணிக்காய் மேல் உள்ள ஆசையில் பக்கத்து வீட்டில் விளைந்த பூசணிக்காயைய் திருடி விடுகிறார் இது ஊரார் அணைவரும் அறிய அவர் பெயர் பூசணிக்காய் திருடன் என்று மாறி போனது.. அவர் வீட்டு பெயரே பூசணி திருடர் வீடு என்று மாறி போனது பல தலைமுறைகள் கழிந்தும் பெயர் மாறவில்லை , இப்பொழுது அந்த வீட்டில் அவர் பேரன் வாழ்ந்து வருகிறார் அவர் காதுபடவும் பலர் பூசணிக்காய் திருடர் வீட்டை தாண்டி சென்றால் அந்த கோவில் வரும் என்பது போல் விலாசம் கொடுத்தனர். இதை கேட்ட அந்த பணக்காரர் தாத்தா தெரியாமல் செய்த தவறுக்காக நாம் ஏன் திருடர் பட்டத்தோடு வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு ஞானியை நாடி சென்றார். 

 அவரிடம் நடந்ததை கூறி திருத்தம் கேட்க ஞானி அவர் கூறினார் உன் வீட்டில் தினம் நூறு பேருக்கு சாப்பாடு போடு என்று சொல்லி அனுப்ப அவரும் போட ஆரம்பித்தார் ஒரு வாரத்தில் அவர் காது பட கேட்டார் அந்த தச்சர் வீடு எங்கு உள்ளது என்று கேட்க்க ஒருவர் கூறினார் அங்கே ஒரு சோறு போடுற ஐயா வீடு உள்ளது அதில் இருந்து மூன்றாவது வீடு என்று விலாசம் கூறினர் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.

 *விளக்கம்.* பூசணிக்காய் திருடியதை  சோறு போட்டு நல்ல பெயர் வாங்கி மறைத்தார். 

தவறு செய்து மறைத்தல் அல்ல இது ... நல்லதை செய் தவறு தானாக மறையும் என்பதே கருத்து.

சென்னை பற்றிய சுவையான தகவல்கள்

ஊரும் பெயரும்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்கக் காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே. அது பற்றிய செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் பார்ப்போம்.

108 சக்தி ஸ்தலங்களில் 51 வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

chrome leather factory அப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது அப்பகுதி அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார் பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள் பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி என்றானது.

உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கேகே நகர் என அழைக்கிறோம்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட அப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

நீதி கட்சி தலைவர் சர் பிடிதியாகராஜன் செட்டியின் பெயராலேயே அப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (திநகர்).

புரசை மரங்கள் மிகுதியாக அப்பகுதியில் இருந்ததால், அப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக் கொண்டு சென்று காஞ்சி வரதாராஜப் பெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’ இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை. முன்பு அப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்று அழைக்கப்படுகிறது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது

பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், அப்பகுதி போரூர் எனப்படுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு அப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும் அதன் காரணமாக அப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

தாமஸ் பாரி என்பவர் அப்பகுதில் வணிகம் செய்துவந்தார் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே அப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னாளில் வளசரவாக்கம் என மாறியது.

சிறுநீரக கற்கள் கரைய இதை கடைபிடியுங்கள்

கல் கரைக்க எப்படி வீட்டு வைத்தியம் செய்யலாம் என்று பார்ப்போம்:

சிறுநீரகக் கற்கள் வந்திருப்பதாக உணர்ந்தால் தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.
தண்ணீருக்கு மாற்றாக இளநீர் குடிக்கலாம்.
தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது சிறுநீரும் கூடுதலாக உப்புத்துகளோடு வெளியேறிவிடும்.
எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன், தேன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், வெங்காயத்தை நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கலக்கி தினமும் குடிக்க வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து உமிழ்நீரோடு கலந்து குடித்து வர வேண்டும். இப்படி செய்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும்.
வாழைத்தண்டை சாறாக்கி சிட்டிகை மிளகுத்தூள், உப்பு கலந்து குடித்து வந்தால் சிறுநீரககல் கரையும். வாரத்துக்கு மூன்று நாள் மட்டும் எடுத்து கொண்டால் போதும்.
வாழை மரத்தை வெட்டிய பிறகு அடிமரத்தை உள்ளங்கை அளவு பள்ளமாக்கி அதை மேலாக்க துணிகொண்டு மூடவேண்டும். 8 மணி நேரம் கழித்து துணியை விலக்கினால் அந்த பள்ளத்தில் இலேசாக சாறு வடிந்திருக்கும். அதை குடித்து வந்தால் எப்பேர்பட்ட சிறுநீரக கல்லும் கரைந்து போகும்.
நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், சிட்ரிக் அமிலம் நிறைந்த பழச்சாறுகள், மாதுளைபழச்சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.
சிறுநீரகங்களில் இருக்கும் தாது உப்பு மற்றும் யூரிக் அமிலத்தை சமநிலையில் வைக்க துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து குடித்து வரலாம்.
துளசி இலை இல்லாதவர்கள் துளசி பொடியை வாங்கி தேனில் குழைத்து சாப்பிடலாம். சீறுநீரக கற்களை கரையும்.
உணவில் உப்பை குறைக்க வேண்டும்.
காரம், மசாலா. புளி உணவுகளை போதுமான அளவு தவிர்க்க வேண்டும்.
கால்சியம் அதிகமிருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
யூரிக் அமிலம் அதிகமிருக்கும் உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.
சிட்ரேட் அளவையும் குறைக்க வேண்டும்.
பதப்படுத்தபட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட தயாரிப்புகள், காபி,டீ,சோடாபானங்கள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்

Sunday, November 1, 2020

தத்துவம்

உன் முயற்சியை தடுப்பது சமுதாயம் அல்ல உன் பயம்தான்

திருத்திக் கொள்ள முடியாத ஒரே தவறு.
நம்மை காயப்படுத்திய
உறவுகள் மீது மீண்டும் மீண்டும் நாம் அன்பு காட்டுவது தான்

வாழ்க்கை என்பது நாணயம் போல.இன்பம்
ஒரு பக்கத்திலும் துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும் ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்குத் தெரியும் மறந்திடாதீங்க.
மறுபக்கமும் அதன் வாய்ப்பிற்க்காக காத்திருக்கும்

பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும்.....  கொடுத்த பணத்தை கேட்டுப் பார் மண்ணை வாரி தூற்றும்.....

போராடி தோற்றுப் பார்
எதிரியும் உன்னை நேசிப்பான்.
தோல்விக்கும் வெற்றிக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம் அதை பிடிக்க உனக்கு தேவை சுய நம்பிக்கை எவ்வளவு விழுகிறாயோ அதை விட வேகமாய் எழு.

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...