Sunday, November 22, 2020

சாப்பிட உடனே குளிக்க கூடாது. ஏன் என்று தெரியுமா?

https://www.youtube.com/c/TindivanamTimes
சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது என ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

பொதுவாக நம் வீட்டில் பெரியவர்கள் சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என சொல்வார்கள். அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் பலருக்கும் தெரிவது இல்லை. ஆனாலும் நம்மில் பலரும் சாப்பிட்டதும் குளிக்கிறோம்.

குளித்துவிட்டு காலைச் சாப்பாட்டில் கைவைப்பது உத்தமம். ஆனால் பலரும் அப்படிச் செய்யாமல் சாப்பிட்ட பின்பு குளிக்கச் செல்வதையும் பார்க்கிறோம்.

பொதுவாகவே சாப்பிட்ட உடனே குளித்தால் உடலில் இரத்த ஓட்டத்தை அது குறைக்கும். அப்படி குறையும்போது செரிமானம் தாமதம் ஆகும். இதனால் நாம் சாப்பிட்ட சாப்பாடு உணவுக்குடலில் அப்படியே நொதித்து அழுகிவிடும். இது நம் இயக்கத்தை மந்தமாக்கும். கூடவே மலச்சிக்கல், குமட்டல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். பொதுவாகவே நாம் சாப்பிட்ட பின்பு உடலில் ஆற்றல் செயல்படுத் துவங்கும். இதனால் நாம் உண்ட உணவு எரிந்துபோகும். அதனால் தான் ஆயுர்வேதம் இதனை நெருப்பு என்கிறது. ஆனால் இந்த ஓட்டத்துக்கு மாறாக நாம் தண்ணீரை விட்டு குளித்து, உடலுக்கு குளிர்ச்சியை தந்துவிடுவதாகக் கூறுகிறது ஆயுர்வேதம்.
அதேநேரம் நம் தமிழர் மருத்துவம் சாப்பிட்ட 2 மணிநேரத்துக்கு குளிக்கவேண்டாம் எனவும், அறிவியலோ சாப்பிட்டு 35 நிமிடங்களுக்கு குளிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறது. இனி நீங்களும் சாப்பிட்ட உடனே குளிக்க மாட்டீர்கள் தானே?

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...