Sunday, February 28, 2021

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து PSLC C51 ராக்கெட்

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து 28/02/ 2020 அன்று காலை 10.24 மணிக்கு பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் முதல் ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட்டில் ஏவப்படும் அனைத்து செயற்கைக் கோள்களும் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மிஷன் செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது.

இந்த அமேசானியா, 637 கிலோ எடை கொண்டதாகும். அதன் ஆயுள் காலம் 4 ஆண்டுகள் என்றும், இந்த செயற்கைகோள் பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டதாகும்.

இதில் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி,இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்களும், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் இதுவரை அமெரிக்கா மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு ஃபைசர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் அமெரிக்காவில் செலுத்தப்படுகின்றன. உலகிலேயே ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு முதல் முறையாக அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. எனவே இது ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

பெல்ஜியத்தை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஜூன் மாதத்துக்குள் 10 கோடி டோஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகளும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளன.

அதே போல் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் கோவேக்ஸ் திட்டம், இந்த நிறுவனத்தின் 50 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க இருக்கிறது.  அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி மோசமான உடல்நல பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 சதவீதத்துக்கு மேல் செயல் திறனைக் காட்டியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும், தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 28 நாட்களுக்குப் பிறகு  யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிதாக வருவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கியது.


Saturday, February 27, 2021

கொரோனா தடுப்பூசி கட்டணம் எவ்வளவு என்று தெரியுமா?

தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியின் கட்டணம் ரூபாய் 250 ஆக நிர்ணயம். அதேவேளையில் அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் 1 முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் துவக்கம்

விழுப்புரம் பழைய தாலுக்கா அலுவலகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்! 

விழுப்புரத்தில்
திரு.வி.க சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலகத்தை புனரமைத்து, வண்ணம் தீட்டி 'டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 16.10.2002 ஆண்டு துவங்கப்பட்டது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 123 கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை அளித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் புதியதாக பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அந்தப் பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டு முதலே செயல்படத் துவங்கும்" என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது பற்றிய மசோதா ஒன்று கடந்த 5-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் காந்தி சிலை அருகே திரு.வி.க சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலகத்தை புனரமைத்து, வண்ணம் தீட்டி, 'டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் முன்னதாக வட்டாட்சியர் அலுவலகமாகவும் (தாலுக்கா ஆபிஸ்), பின் சட்டக் கல்லூரியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. சட்டக் கல்லூரி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தப் பழைய கட்டடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் காணொளி காட்சி மூலம் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையால் குத்துவிளக்கு ஏற்றி இதன் செயல்பாடுகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன.


27.08.2021 அன்று TRB தேர்வு

Friday, February 26, 2021

சிரியாவில் ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.


கடந்த 15 ஆம் தேதி அமெரிக்க படைத்தளங்கள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த வான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளை பாதுகாப்பதில் ஜோ பைடன் அரசு உறுதியாக இருப்பதாக ஜான் கிர்பி கூறினார். அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த வான் தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஜான் கிர்பி தெரிவித்தார்.

தமிழகத்தில் எப்போது தேர்தல் என்று தெரியுமா?

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரேநாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.



அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே-2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல்1, 6, 10, 17, 22, 26, 29 தேதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 
அசாமில் மார்ச் 27, ஏப்ரல்1 மற்றும் 6 தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் விபரங்களை அறிவித்தார்.

தமிழக ராணுவ வீரர் பலி

maduraipalusamy

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எதிர்த்துப் போரிட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த மதுரையை சேர்ந்த வீரர் பாலுசாமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக திபெத் எல்லையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரக்கூடிய மதுரை பொய்கைக்கரைப்பட்டி சேர்ந்த லக்ஷ்மன் என்பவரின் மூன்றாவது மகன் தான் பாலுசாமி. 31  இளம் வீரரான பாலுசாமிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் தான் திருமணமாகியுள்ளது. தற்பொழுது இவருக்கு ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் உள்ளதாம்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், இன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தைப் பிரிந்து நாட்டிற்காக பணியாற்றிய பாலுசாமியின் உயிரிழப்பு மதுரையில் உள்ள பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டபேரவை தேர்தல் தேதி எப்போது?

இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணியளவில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தமிழக அரசின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைகிறது. இதனால் அம்மாநிலத்திற்கான தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதனிடையே இறுதி வாக்காளர் பட்டியலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனிடையே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் சென்னையில் இரண்டு நாட்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடையே ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்

இந்நிலையில், தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் அறிவிக்க உள்ளார். இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி அமைக்கும் வியூகங்களை அமைத்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவருமே தேர்தல் என்னும் திருவிழாவை சந்திக்க உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

6 சவரன் வரையிலான விவசாயிகளின் நகைக்கடன் ரத்து- தமிழக முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் 

பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களில் 6 சவரன் வரை அடமானம் வைத்துப் பெறப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Thursday, February 25, 2021

அமெரிக்காவின் பட்ஜெட் இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு

அமெரிக்காவின் பட்ஜெட் இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்கும் முன்பே, அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்தார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிகளவில் பதவிகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார்.

ஆனால், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ மான்சின் என்ற செனட் எம்பி. தாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேனும் அவருக்கு எதிர்த்து வாக்களிப்பதாக தெரிவித்திருந்தனர்.

முன்னதாக செனட் எம்பி.க்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வாயிலாக நீரா தாண்டன் விமர்சித்து இருந்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நீரா தாண்டன் தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய டுவிட்டர் பதிவுகளை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நீரா தாண்டனின் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோ பைடனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். தனது தவறுக்காக தாண்டன் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அதை ஏற்க எம்பி.க்கள் தயாராக இல்லை.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில், “பட்ஜெட் துறையை வழிநடத்துவதற்கான சரியான, பொருத்தமான ஒரே நபர், நீரா தாண்டன் மட்டுமே. அவரை விட்டால் வேறு ஆளில்லை. அவர் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

பிரேசில் செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்கத்தயாராகும் இந்தியாவின் PSLV C51!

பிரேசில் செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்கத்தயாராகும் இந்தியாவின் PSLV C51!
பிப்ரவரி 28-ல் PSLV-C51-ன் (Polar satellite launch vehicle C51) மூலம் பிரேசிலின் 'அமேசானிய 1' (Amazonia 1) உட்பட 20 சிறிய செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தவுள்ளது. இந்த சிறிய செயற்கைக் கோள்களில் இந்தியத் தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்களும் அடங்கும். PSLV -C51 தான் இந்தியாவில் வணிக ரீதீயாக செலுத்தப்படும் முதல் ராக்கெட் ஆகும்.

இஸ்ரோ சார்பில் 2019-ம் ஆண்டு NSIL (Newspace India Limited) என்ற அமைப்பும், 2020-ல் IN-SPACe என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. இந்த இரு அமைப்பும் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் தனியார் துறைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், 'NSIL' இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டன. தற்போது ஏவப்படவுள்ள ராக்கெட்டில் அமேசானியா செயற்கைக் கோள்தான் முதன்மையான செயற்கைக் கோளாக இருக்கும். அதனையடுத்து இஸ்ரோவின் நானோ செயற்கைக் கோள் ஒன்றும், IN-SPACe அமைப்பில் இருந்து சிறிய செயற்கைக் கோள்கள் நான்கும், NSIL அமைப்பின் இருந்து 15 சிறிய செயற்கைக் கோள்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் முதன்மைச் செயற்கைக்கோளாக இருக்கும் அமேசானியா 1 செயற்கைக் கோள் பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப்பட்ட பூமியைக் கண்காணிக்கும் வகையிலான முதல் செயற்கைக்கோள். இதனைப் பிரேசிலின் விவசாயப் பயன்பாட்டிற்கும், அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் காடுகளை அழித்தல் முதலான பணிகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏவப்படவுள்ள சிறிய செயற்கைக் கோள்களில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்களும் இடம் பெறும். UNITYSat எனப்படும் மூன்று சிறிய செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்ட ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் கல்லூரி உருவாக்கிய JITsat, நாக்பூர் கல்லூரி உருவாக்கிய GHRCESat மற்றும் கோயம்புத்தூர் ஶீ சக்தி கல்லூரி உருவாக்கிய Sri sakthi sat ஆகியவையும் அடங்கும்.

இந்த ராக்கெட்டானது பிப்ரவரி 28-ம் தேதி இந்திய நேரப்படி காலை 10.28-க்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

குவிஆடி குழிஆடி வேறுபாடுகள்

முகலாய பேரரசர் அக்பர்

அக்பர் - பிறப்பு முதல் இரண்டாம் பானிபட் போர் வரை

9, 10 , 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்


தமிழகத்தில் 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக சட்ட பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு

 ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு
சட்ட பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Wednesday, February 24, 2021

சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடில்லி:சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி, கடந்த ஆண்டில், 16.15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த, 2020ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 16.15 சதவீதம் அதிகரித்து, 1.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டான, 2019ல், 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இதன் காரணமாக, சீனாவுக்கு இடையேயான வர்த்தக பற்றாக்குறை, 19.39 சதவீதம் குறைந்துள்ளது. கரும்பு வெல்லம், சோயா எண்ணெய், தாவர எண்ணெய் ஆகியவை, அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

எந்த நாட்டின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது என்று தெரியுமா?

கேரளா மகாராட்டிராவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்

கேரளா, மகாராஷ்டிரா,N440-K, E484-K என இரண்டு 2 உருமாறிய புதிய கொரோனா வைரஸ்.. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துங்கள் : மத்திய அரசு அறிவுரை!!

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 4 மாதங்களாக ஒருநாள் கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 15 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 6,218 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவுரங்காபாத்தில் மார்ச் 8ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் 75% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4%, தமிழகத்தில் 2.78% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் N440-K,E484-K ஆகிய 2 உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று வேகமாக பரவி வருவதால், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தொற்றை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 187 பேருக்கு இங்கிலாந்தில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், 6 பேர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவும் புதிய வகை கொரோனாவாலும் ஒருவர் பிரேசில் வைரசாலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

வரலாற்றில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம்

வரலாற்றில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம்
1991 ஆம் ஆண்டில், கார்கோ 747 என்ற விமானத்தில் ஏற்றி யூத மக்களை எத்தியோப்பியா நாட்டில் இருந்து அனுப்பி வைத்தனர்.

இருக்கை இல்லாத விமானங்களில் ஒரு முறைக்கு 1086 பயணிகள் அனுப்பப்பட்டனர். ஒரு முறை இறங்கும் போது 1088 பேர் இறங்கினர். ஏனெனில் விமானத்திலேயே பிரசவம் நடந்து இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன.

ஆப்பரேசன் சாலமன் என்று அழைக்கப்பட்ட இந்த செயல்பாட்டில் 34 இஸ்ரேலி விமானங்கள் பயன்பட்டன. 14,325 எத்தியோப்பிய யூதர்கள் வெறும் 36 மணி நேரத்தில் இஸ்ரேலுக்கு இட மாற்றப்பட்டனர். இந்த செயல்பாடு வரலாற்றில் மிகவும் துணிகரமான செயல்பாடாக இன்றும் கருதப்படுகிறது.

Tuesday, February 23, 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்!*

⚪️🔴 *மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்!*

*மங்கு ஹனுமந்த ராவ் தற்போது திருப்பதி எஸ்.வி. மருத்துவ கல்லூரி தலைவராக பணியாற்றுகிறார்.*

*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.*

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திறந்து வைத்தார். தலைவாசல் கூட்டு ரோட்டில் 1100 ஏக்கரில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 கோடி ரூபாய் மதப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 5வது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த பூங்கா 3 பிரிவுகளாக அமைகிறது. முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

3-ம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.

இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக வெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் யாகசாலை பூஜையிலும், திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுகவின் மகளிர் பூத் கமிட்டிக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஆத்தூர் தாலுகாவில் உள்ள தலைவாசல் இனி தனி தாலுகாவாக செயல்படும் என அறிவித்தார். அதிமுக அரசு திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திகழ்வதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் என்றும் தெரிவித்தார். எதை சொல்கிறதோ அதை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

சவுதியில் உருவாகிறது பெண்கள் ராணுவப் படை!

பின் சல்மானின் 'விஷன் 2030'... சவுதியில் உருவாகிறது பெண்கள் ராணுவப் படை!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுபாடுகள் உள்ள நிலையில், 'விஷன் 2030' என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில், அந்நாட்டு அரசு அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்ட தடை இருந்தது. நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை 2018-ல் சவுதி அரேபிய அரசு நீக்கியது. இதேபோல், கால்பந்து போட்டியை பார்க்க இருந்த தடையும் நீக்கப்பட்டது. வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண் தூதுவரை சவுதி அரேபியா நியமனம் செய்தது. சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்தது. இதேபோல் செய்தி வாசிப்பாளர் போன்ற பல பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது மற்றொரு கட்டுப்பாடு உடைக்கப்பட இருக்கிறது. சவுதி அரேபிய பெண்கள் இப்போது ராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவுதி பெண்கள் சவுதி அரேபிய ராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப் படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று 'கல்ஃப் நியூஸ்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முடி இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த சீர்திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணுவத்தில் சேர, ஒரு பெண் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், 155 சென்டிமீட்டர் உயரம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், வேலையில் சேர விரும்பும் பெண் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றிருக்க வேண்டும். சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்கக் கூடாது. திருமணம் முடிக்காதவர் ராணுவத்தில் சேர்ந்தால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக இடைக்கால பட்ஜெட்: மாற்றுத்திறனாளிகளுக்கு 'RIGHTS' திட்டம்

தமிழக இடைக்கால பட்ஜெட்: மாற்றுத்திறனாளிகளுக்கு 'RIGHTS' திட்டம்

தமிழக இடைக்கால பட்ஜெட்டில்மாற்றுத்திறனாளிகளுக்கு 'RIGHTS' திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்,மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ‘RIGHTS' என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கானஅரசின் திட்டம் உலக வங்கிகள் பரிசீலனையில் உள்ளது. 2021 - 2022 ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Monday, February 22, 2021

Solarwinds attack.

Solarwinds attack... அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல், பின்னணியில் ரஷ்யாவா?

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஒன்றைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. 'சோலார்விண்ட்ஸ்' (Solarwinds hacks) என அழைக்கப்படும் இந்த சைபர் தாக்குதல் முதன் முதலில் கண்டறியப்பட்டது இரண்டு மாதத்திற்கு முன்பு அதாவது 2020, டிசம்பர் மாதம். ஆனால், இன்னும் பாதிப்பு எந்தளவு என அமெரிக்க அரசால் கண்டறிய முடியவில்லை. பாதிப்பு எவ்வளவு எனக் கண்டுபிடித்து அதில் இருந்து மீள்வதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என அரசுத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய அதிநவீன டெக் ஜாம்பவான் என மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் டெக்னாலஜி தலைக்கணத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அடி இது. அமெரிக்க அரசை மையப்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றிருந்தாலும், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த டெக் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல் பல மாதக் கணக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'ஃபயர் ஐ' (Fire Eye) நிறுவனம்தான் முதன்முதலில் தங்கள் நிறுவனம் சைபர் பாதிப்புக்கு உள்ளானதைக் கண்டறிகிறது. இந்த ஃபயர் ஐ நிறுவனம் தான் அமெரிக்காவின் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் பாதிப்பைக் கண்டறிய எடுக்கும் நடவடிக்கைகளில், இது தங்கள் நிறுவனத்தை மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது எனக் கண்டறிகிறது. மேலும், இந்தத் தாக்குதலானது பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றும் கண்டறியப்படுகிறது. அதன் பின்னர் தான் பிரச்னையின் முழு உருவமும் அமெரிக்காவிற்குத் தெரிய வருகிறது.

இந்த சைபர் தாக்குதலின் ஆரம்பப் புள்ளியாக 'சோலார் விண்ட்ஸ்' என்ற அமெரிக்க நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஐ.டி. மேலாண்மை மென்பொருள் சேவையை அளிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் 'ஓரியன்' (Orion) என்ற மென்பொருளின் மூலம் தான் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றனர். இந்த சோலார்விண்ட்ஸ் தாக்குதல் 'Supply chain attack' என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒருவர் தாக்க விரும்பும் நிறுவனத்தையோ அல்லது கணினியையோ நேரடியாகத் தாக்காமல், மூன்றாம் தர நிறுவனங்களின் மென்பொருட்கள் மூலம் தாக்குதலைச் செயல்படுத்துவது.

சோலார்விண்ட்ஸ்-ன் ஓரியன் மென்பொருளுக்கான அப்டேட்டில் 'Sunburst' என்ற மால்வேரை உள்நுழைத்திருக்கின்றனர். இந்த மால்வேரானது சோலார்விண்ட்ஸ்-ன் செயல்பாடுகளுடன் கலந்து தன்னை கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மறைந்த கொள்ளும் தன்மை உடையது. அந்த ஒரு ஓரியன் அப்டேட் மூலம், சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்களது கணினியில் ஏற்றப்பட்டது இந்த மால்வேர். இந்த மால்வேரின் முக்கியப் பணியே, தாக்கப்பட்ட கணினியில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்களுக்கு அனுப்புவதுதான். மேலும், இந்த மால்வேர் கணினியில் நுழைந்ததும், அந்தக் கணினியில் இருக்கும் ஆன்ட்டி வைரஸ்களின் செயல்பாடுகளை முடக்கிவிடும் தன்மையுடையது.

இந்த மால்வேரானது மார்ச் மாதத்திற்கு முன்பே பரப்பப்பட்டுவிட்டது என்றும், இதன் மூலம் சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்கள் 18,000 மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய நிறுவனம் இருக்கும் என்பது அமெரிக்க அரசு மற்றும் சைபர் நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது. ரஷ்யா பின்னணியில் இருக்கிறது என எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை எனினும், ரஷ்யாவைத் தவிர இவ்வளவு துல்லியமாகவும், இவ்வளவு பெரிய அளவிலும் தாக்குதல் நடத்தும் திறமை வேறு யாரிடமும் இல்லை எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தாக்குதலை ஒரு தனி நபரோ அல்லது ஒரு தனி நிறுவனமோ செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, ரஷ்யா இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை எவ்வளவு தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனத் தெளிவாகத் தெரியாத நிலையில், இதன் விசாரணை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன். தற்போது 100 தனியார் நிறுவனங்கள் மற்றும் 9 அரசு நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும், எவ்வளவு என மேற்கொண்டு நடைபெறும் விசாரணையில் தெரியவரும். மேலும், அதன்பின்னர் தான் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனத் தெரிவதால், சோலார்விண்ட்ஸ் நிறுவனத்தின் மென்பொருட்களில் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோலார்விண்ட்ஸ் சர்வர்களுடன் இணைப்பைத் துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலானது, சிறு நிறுவனங்கள் மட்டுமல்லாது மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனங்களையும் பாதித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த இரு மாதங்களாகவே, இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் சில தகவல்களும் திருடப்பட்டுள்ளன. ஆனால். அவை மிக முக்கியமான தகவல்கள் இல்லை. தற்போது தங்கள் நிறுவனம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

பொது அறிவு

சென்னை ஐஐடியின் புதிய ஹெச்.ஐ.வி மருந்து: '

சென்னை ஐஐடியின் புதிய ஹெச்.ஐ.வி மருந்து: 'எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆயுளை நீட்டிக்கும்'

எய்ட்ஸ் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைந்து பெருகுவதை தடுக்கும், மருந்தின் மெய்நிகர் மாதிரியை, (விர்ச்சுவல் மாடல்) உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் வைரஸ் தொற்று உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் என்பது அவர்கள் கூற்று.

எனினும், இந்த மருந்து முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதன் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.

16 ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர், மருந்தின் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்கியுள்ளதாக கூறும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருந்து செயல்பாட்டுக்கு வந்தால், ஹெச்.ஐ.வி நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்கிறார்கள்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், இதேபோல இதற்கு முன்னதாக வெளியான தடுப்பு மருந்துகள் பலவும், சில காலத்துக்குப் பின் செயல் இழந்துவிட்டன என்கின்றனர்.

இந்த மருந்து முதலில், நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தபட்ட பின், அதன் செயல்திறனை பொருத்துதான் வெற்றியைத் தீர்மானிக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், மருந்துகள் சில காலம் கழித்து ஏன் செயலிழந்து விடுகிறது என்பதும் ஐஐடி ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சி பல நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. 1995 முதல், உலகளவில் சுமார் பத்து தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும், அந்த மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் செயலிழந்து விடுவது வாடிக்கையாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐஐடி சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சஞ்சீப் சேனாபதி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்கள் முகமது ஆசான், சின்மயி பிண்டி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரை சமீபத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைவதை தடுப்பது எப்படி என்றும் அதன்மூலம் நோயாளியின் ஆயுட்காலத்தை எவ்வாறு நீட்டிக்கலாம் எனவும் விளக்கும் கட்டுரை ஒன்றை மூன்று ஆய்வாளர்கள் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கட்டுரையை அடுத்து, அவர்கள் வடிவமைத்துள்ள மருந்தின் மாதிரிக்கு செயல்வடிவம் கொடுக்க மருந்து நிறுவனங்கள் அணுகியுள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வின்போது ஏற்பட்ட அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் சஞ்சீப், '' இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த நிதி மூலம் இந்த ஆய்வு நடைபெற்றது. தொடக்க காலத்தில், பல நாடுகளில் வெளியான தடுப்பு மருந்து ஏன் செயல் இழக்கின்றன என ஆராய்ந்தோம். தடுப்பு மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் ஏன் வேலைசெய்வதில்லை என்பதற்கு பல காரணிகளை கண்டறிந்தோம்.''

''வைரஸ் முதிர்ச்சி அடைவதை தடுப்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பதை கண்டறிந்தோம். இதனை கவனித்து, வைரஸின் முதிர்ச்சியை தடுத்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் அந்த வைரஸ் பெருகுவது குறையும் என்பதை உறுதி செய்தோம்,''என்கிறார்.

தற்போது கண்டறிந்துள்ள மாதிரி மருந்து வடிவம் செயல்பாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன என்றும் கூறுகிறார் சஞ்சீப்.

''வைரஸ் உடலில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் விரைவில் இறப்பதை இந்த மருந்து தடை செய்யும். நோயாளியின் வாழ்நாள் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை இந்த மருந்து கொடுக்கும் என்பதை எங்கள் ஆய்வு முடிவாக வெளியிட்டுள்ளோம். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து நிறுவனமும், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையும் மருந்து தயாரிப்பில் ஈடுபட அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்துள்ளார்கள். விரைவில், இந்த மருந்தின் செயல் வடிவத்தை உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,''என்கிறார் பேராசிரியர் சஞ்சீப்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் மருத்துவ அதிகாரிகளிடம் பேசியபோது, விர்ச்சுவல் மாதிரி மட்டும்தான் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்பதால், ஆராய்ச்சியாளர்களின் கூற்றை புதிய கண்டுபிடிப்பு என ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார்கள்.

பிபிசிதமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத மருத்துவ அதிகாரி ஒருவர், ''உயிர்க் கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது சவாலான காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை, விர்ச்சுவல் மாதிரி ஒரு தீர்வு அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.'

'அறிவியல் இதழில் கட்டுரை வெளியிட்டதும், அது இறுதியான கண்டுபிடிப்பு என சொல்லமுடியாது. ஆராய்ச்சியாளர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். கவனமும் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்,'' என்கிறார் அந்த மருத்துவ அதிகாரி.

ஆஞ்சல் தாகூர்

உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த ஆஞ்சல் தாகூர்

சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஆஞ்சல் தாகூர்.

இத்தாலியின் கார்டினாவில் நடந்த உலக பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார் இந்தியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை ஆஞ்சல் தாகூர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணலியை சேர்ந்தவர் ஆஞ்சல் தாகூர். கடந்த 2018ம் ஆண்டு துருக்கியில் நடந்த Alpine Ejder 3200 கோப்பை தொடரில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் என்று நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்தவர் ஆஞ்சல் தாகூர்.

அப்போதே, அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியிருந்தார். இந்நிலையில், இத்தாலியில் நடந்த உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக விளையாடினார் ஆஞ்சல் தாகூர்.

இதன்மூலம் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஆஞ்சல் தாகூர்.

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...