Wednesday, February 24, 2021

கேரளா மகாராட்டிராவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்

கேரளா, மகாராஷ்டிரா,N440-K, E484-K என இரண்டு 2 உருமாறிய புதிய கொரோனா வைரஸ்.. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துங்கள் : மத்திய அரசு அறிவுரை!!

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 4 மாதங்களாக ஒருநாள் கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 15 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 6,218 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவுரங்காபாத்தில் மார்ச் 8ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் 75% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4%, தமிழகத்தில் 2.78% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் N440-K,E484-K ஆகிய 2 உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று வேகமாக பரவி வருவதால், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தொற்றை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 187 பேருக்கு இங்கிலாந்தில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், 6 பேர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவும் புதிய வகை கொரோனாவாலும் ஒருவர் பிரேசில் வைரசாலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...