Thursday, March 25, 2021

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் சிக்கலில் உலக நாடுகள்

சூயஸ் கால்வாய்

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய்  ஆசியாவின் மத்திய தரைக்கடலையும் ஐரோப்பாவின் செங்கடலையும் இணைக்கும் உலகின் மிக முக்கியமான நீர் வழிப்பாதை ஆகும்.

1869 ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிமீ நீளமுள்ள இந்த கால்வாய் வழியாக 12% உலக வர்த்தகமும் 8% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகமும் நடைபெறுகிறது. 
ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த கால்வாய் வழியாக கொண்டு செல்ல படுகிறது. 2015 ம் ஆண்டு முதல் பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.


இந்த நிலையில் 24/03/2021 அன்று 400மீட்டர் நீளமும் 59மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிக பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான EVERGIVEN பலத்த காற்றினால் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இக்கப்பலை
இழுவை கப்பல் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு வேலை இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றால் உலக வர்த்தகம் ஸ்தம்பித்து விடும் அபாயமும் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கப்பலை மீட்க கால்வாயின் இரு பக்கங்களிலும் மண் தோண்டும் பணியும் துவங்கியது.


இப்பணி இரு நாட்களில் முடிவு பெறவில்லை என்றால் பழைய கால்வாயை திறக்க போவதாகவும் எகிப்து அறிவித்துள்ளது.

மேலும் பல்வேறு செய்திகளை பெற

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...