இந்தியாவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில் 10-ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி தமிழகத்தில் இருந்து கடந்த ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கும் இடையிலான 5 ஆண்டுகள் காலகட்டத்தில் 13.1 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் நாட்டிலெயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற மாநிலத்தவர்களாக கேரளவாசிகள் முதல் இடத்தையும், தமிழர்கள் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும், இதில் கேரளத்தவர் 19 லட்சம் பேர் என்றும், தமிழர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரு மாநிலங்களின் பங்களிப்பு மட்டுமே 24 சதவீதமாக ஆக உள்ளது. 3வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்கிருந்து 12.6 லட்சம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குசென்றுள்ளனர். இதே போல 44.3 லட்சம் பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா காலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4.7 லட்சம் பேர் தமிழகத்திற்கு திரும்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link
TNPSC Tips
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt
TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO
Telegram Channel link
https://t.me/tnpsctips123
YouTube channel subscription for upcoming videos
https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1
WEBSITE
arulolipedia.blogspot.com
No comments:
Post a Comment