24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்: மக்களவையில் நிறைவேற்றம்
24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளின் காரணமாக தங்களது கருவினைக் கலைக்க விரும்பினால், 20 வாரங்கள் வரையிலான கருவினைக் கலைப்பதற்கு வழி செய்யும் சட்டங்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து அரசிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா நிறைவேறியுள்ளதன் காரணமாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகள் மற்றும் வல்லுறவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment