Friday, March 19, 2021

ஹீமா தாஸை வென்ற தமிழக வீராங்கனை

தடகளம்: தனலட்சுமி சாதனை

பஞ்சாப்பில் பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் ஹிமா தாசை (24.39) முந்தி 'நம்பர்-1' இடம் பிடித்த தமிழகத்தின் தனலட்சுமி (23.26 வினாடி) பைனலுக்கு முன்னேறினார். தவிர 1998ல் சென்னையில் நடந்த தேசிய தடகளத்தில் பி.டி.உஷா (23.30) படைத்த சாதனையை தகர்த்தார்.

பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கிராசெனா மெர்லி, 1.84 மீ., தாண்டி முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் மற்றொரு வீராங்கனை கிஜி ஜார்ஜ் 1.70 மீ., தாண்டி, வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் ஐஸ்வர்யா (13.05 மீ), வெண்கலம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் இலக்கியதாசன் (21.25 வினாடி) இரண்டாவது இடம் பெற்று வெள்ளி வென்றார்.

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...