Tuesday, March 2, 2021

இந்தோனீசியாவின் சினாபுங் எரிமலை வெடித்தது

இந்தோனீசியாவின் சினாபுங் எரிமலை வெடித்தது

இந்தோனீசியாவின் வடசுமத்ரா மாநிலத்தில் உள்ள சினாபுங் எரிமலை இன்று வெடித்தது.

ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சூடான சாம்பலை அது கக்கியதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு எரிமலையில் ஏற்பட்டுள்ள அதிக அளவிலான முதல் வெடிப்பு.

இதுவரை காயம் அடைந்தோர் அல்லது மரணமடைந்தோர் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

எரிமலையிலிருந்து குறைந்தபட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும்படி குடியிருப்பாளர்களிடம் முன்கூட்டியே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...